தமிழ்நாடு

இட ஒதுக்கீடு அ.தி.மு.க., சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

Updated : ஆக 01, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை :'அ.தி.மு.க.,வின் சட்டப் போராட்டத்தால், அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமை, உறுதி செய்யப்பட்டுள்ளது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.மனு தாக்கல்அவர்களின் அறிக்கை:அ.தி.மு.க., சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில், இதர
 அ.தி.மு.க., சட்டம் போராட்டம், வெற்றி ,

சென்னை :'அ.தி.மு.க.,வின் சட்டப் போராட்டத்தால், அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமை, உறுதி செய்யப்பட்டுள்ளது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


மனு தாக்கல்



அவர்களின் அறிக்கை:அ.தி.மு.க., சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு, அகில இந்திய தொகுப்பில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முதன் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து அரசியல் கட்சிகள், தங்களை அந்த வழக்குடன் இணைத்துக் கொண்டன.இதை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், ௨௦௨௦ ஜூலை, 27ம் தேதி, 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த... மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ குழுமம் அடங்கிய குழு அமைத்து, 2021 - 2022 முதல், ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது குறித்து ஆராயும்படி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, 2020 - 21ம் கல்வியாண்டு முதலே, 27 சதவீத ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., சார்பிலும், இதர கட்சிகள் சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்சநீதிமன்றத்தில், 2021 - 22 முதல், ஓ.பி.சி.,க்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த குழு அமைக்கப்படும் என, மத்திய அரசு கூறியது.

இதையடுத்து உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. அதன்படி, 27 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற, மத்திய அரசு குழு அமைத்தது. இக்குழு அறிக்கையின்படி, நேற்று முன்தினம் மருத்துவ கல்வியில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில், ஓ.பி.சி.,பிரிவினருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீட்டை, இந்த ஆண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை அ.தி.மு.க., சார்பில் வரவேற்கிறோம். மருத்துவ கல்வியில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை, உறுதியாக நின்று அமல்படுத்திய பிரதமருக்கு, தமிழக மக்கள் சார்பிலும், அ.தி.மு.க., சார்பிலும் நன்றி.


இட ஒதுக்கீடு உரிமை



அ.தி.மு.க.,வின் சட்டப் போராட்டத்தால், அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமை, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, 50 சதவீதம் என்ற இலக்கை அடைவதற்கான முயற்சியை அ.தி.மு.க., தொடர்ந்து மேற்கொள்ளும்.இந்த வெற்றி, அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கட்சியால் தொடர்ந்து பின்பற்றி வரும் சமூக நீதிக்கு கிடைத்த, மாபெரும் வெற்றியாகும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
31-ஜூலை-202120:34:16 IST Report Abuse
Vena Suna அதிமுக செய்த சாதனைக்கு ஸ்டாலின் பெருமை தேடி கொள்கிறார். ஊடகங்கள் துணை போய் ,பொய்கள் வெற்றி பெறுகின்றன.
Rate this:
Cancel
31-ஜூலை-202120:14:08 IST Report Abuse
அப்புசாமி நீட் தேர்வு நடக்கப் போகுதே... அது யாரோட வெற்றி? யாரோட தோல்வி?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
31-ஜூலை-202118:49:57 IST Report Abuse
J. G. Muthuraj இதே மாதிரி மேகதாது அணை சட்டப்பிரச்சனைக்கும் போராடி வெற்றி தேடி தாருங்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X