அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர் குறைகளை விரைந்து களைய வேண்டும்: ஸ்டாலின்

Updated : ஆக 01, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை :''ஓய்வூதியர்களின் குறைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, நிதித்துறை அலுவலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.நிதித்துறை மற்றும் அதன் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, மே, 8 முதல், ஜூலை, 28 வரை, 500 கோடி ரூபாய்க்கும்
 ஓய்வூதியர் குறைகள், களைய , ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை :''ஓய்வூதியர்களின் குறைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, நிதித்துறை அலுவலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.நிதித்துறை மற்றும் அதன் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, மே, 8 முதல், ஜூலை, 28 வரை, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெறப்பட்டுள்ளது.அதில், கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு, 305 கோடி ரூபாய், செலவிடப்பட்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தணிக்கை முறைகளை வலுப்படுத்தி, தணிக்கை தடைகள் எழாத வகையில், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள தணிக்கை பத்திகளின், தற்போதைய நிலையை கண்காணிக்க வேண்டும்.ஓய்வூதியதாரர்களின் குறைகளை களைய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

அரசின் வரவு செலவு திட்ட நடவடிக்கைகள்; பட்ஜெட் தயாரிப்பில், நவீன வழிமுறைகளை கையாளுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன், கருவூல கணக்குத் துறை ஆணையர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜூலை-202120:12:34 IST Report Abuse
அப்புசாமி பரவாயில்லியே... பெரியவர் ஸ்டைலில் இவரும் தினமும் ஏதோ நல்லது பண்ணுற மாதிரி அறிகி விடக் கத்துக்கிட்டாரே... சீக்கிரம் தாடி வளர்க்க ஆரம்பிக்கலாம்.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202118:54:30 IST Report Abuse
Vittalanand அது சரி ! ஓய்வூதியருக்கு பஞ்சப்படி உயர்வு எப்போ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஜூலை-202110:47:32 IST Report Abuse
duruvasar இந்தியாவில் 1971 இல் முதல் கணினி மும்பையிலில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் அறிமுகப்படுதுவதற்க்கு முன்பே தமிழக காவல்துறை முழுவதையும் கணிணமாக்கிய வரலாற்று உண்மையை நேற்று உலகிற்க்கு அறிவித்து சிக்ஸர் அடித்த மான்புமிகு. தமிழக ஊராட்சி ஒன்றிய முதல்வருக்கு நன்றிகள். சிக்ஸர் அடிப்பதில் கிரிஸ். கெயிலை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்தமைக்கு வாழ்த்துக்கள். தமிழன் தலை நிமிர்ந்து விட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X