போன் ஒட்டு கேட்பு விவகாரம் : விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

Updated : ஆக 01, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : 'போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் குறித்து, சுதந்திரமான விசாரணைககு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், அதிகாரிகள் உட்பட
போன் ஒட்டு கேட்பு விவகாரம் விசாரிக்க , ஒப்புதல்

புதுடில்லி : 'போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் குறித்து, சுதந்திரமான விசாரணைககு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், அதிகாரிகள் உட்பட பலரது மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 'போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ஜான் பிரிட்டாஸ், பிரபல பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன், நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ராம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''ஒட்டு கேட்பு விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும்,'' என கோரிக்கை விடுத்தார்.இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
31-ஜூலை-202113:39:48 IST Report Abuse
sankaseshan இந்தியாவின் இறை ஆண்மை உலகின் பல்வேறு நாடுகள் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகிறது மிக கவனமாக கையாள வேண்டும்.
Rate this:
Cancel
31-ஜூலை-202109:40:34 IST Report Abuse
அப்புசாமி இந்த வழக்கு முடியும் வரையில் வழக்கை விசாரிக்கும் நீதியரசர்கள் தங்களது போனை உபயோகப்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
31-ஜூலை-202111:23:33 IST Report Abuse
Kanthan Iyengaarநம்மவா ரஞ்சன் ககோய் கதை நமக்கு எல்லாம் தெரியும் ...பாவம் வெறும் ராஜ்ய சபை சீட்டுக்கு என்ன என்னவோ செய்திருக்கிரா.....
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
31-ஜூலை-202108:25:08 IST Report Abuse
Kanthan Iyengaar நாட்டு பாதுகாப்பு வ்வொய் சீலிட்ட கவர் வ்வொய் ஜோலியா ஈஸியா முடிச்சிடும்வ்வொய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X