ஆஜராகாத அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?

Updated : ஆக 01, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :'பெகாசஸ்' விவகாரத்தில் 'சம்மன்' அனுப்பியும், நிலைக்குழு கூட்டத்தில் ஆஜராகாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், நிலைக்குழு தலைவர் சசி தரூர் வலியுறுத்தி உள்ளார்.பெகாசஸ் உளவு மென்பொருள் வாயிலாக அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன் உரையாடல்கள் ஒட்டு
ஆஜராகாத அதிகாரிகள் , நடவடிக்கை பாயுமா?

புதுடில்லி :'பெகாசஸ்' விவகாரத்தில் 'சம்மன்' அனுப்பியும், நிலைக்குழு கூட்டத்தில் ஆஜராகாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், நிலைக்குழு தலைவர் சசி தரூர் வலியுறுத்தி உள்ளார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் வாயிலாக அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக, சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் நிலைக்குழு கூட்டத்திற்கு, காங்., - எம்.பி.,யும், நிலைக்குழு வின் தலைவருமான சசி தரூர் அழைப்பு விடுத்தார்.

கடந்த 28ம் தேதி நடக்கவிருந்த அந்த கூட்டத்தில் ஆஜராக, தகவல் தொழில்நுட்பத் துறை, உள்துறை மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.நிலைக்குழுவில் அங்கம் வகிக்கும் பா.ஜ., உறுப்பினர்கள், வருகைப் பதிவில் கையொப்பமிட மறுத்ததால், அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அரசு அதிகாரிகளும் ஆஜராகவில்லை.இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சசி தரூர் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிலைக்குழு கூடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், தங்களால் ஆஜராக இயலாது என, அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அது, பார்லி., மாண்பை அவமதிக்கும் செயல். இந்த விவகாரத்தில் விதிகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
31-ஜூலை-202116:55:52 IST Report Abuse
Nagarajan D நீ உன் மனைவியை கொன்று போட்டு ஓடினாயே அப்போ விசாரணைக்கு வா என்று சம்மன் வந்தபோது வந்தாயா? நீ பேசக்கூடாது கொலைகாரா
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
31-ஜூலை-202115:53:41 IST Report Abuse
Rafi ஆட்சியாளர்கள் தைரியம்மாக சட்ட மீறலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது எதார்த்தமாகி, எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் தேச துரோகி என்ற பட்டம், மேலும் நீதிமன்றமே சந்தேகப்படும் அளவிற்கு தேச துரோக வழக்குகள். நிலைக்குழுவிற்கு வந்து கையொப்பம் இட்டால் அது சாட்சியாகிவிடும் என்ற பயம். நேர்மையானவர்கள் எதையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் பக்குவம் இருக்கும். பத்திரிக்கையாளர்களை நேரில் சந்திக்க பயப்படும் தலைமை. பயந்தவர்களால் ஜனநாயகத்தை எதிர் கொள்ளமுடியாது என்பதை இப்போதைய நம் நாடு அனுபவித்து கொண்டிருக்கு.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-202114:58:45 IST Report Abuse
Sriram V You people celebrated the Chinese communist party celebrations, you must be investigated under custody.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X