ராஜ்யசபாவில் விசிலடித்த எம்.பி.,க்கள் : வெங்கையா ஆவேசம்

Updated : ஆக 01, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி :''எம்.பி.,க்கள் சிலர் விசிலடிப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர்; எதற்கும் ஓர் எல்லை உண்டு,'' என, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு ஆவேசமாக கூறினார்.'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரது மொபைல் போன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்
 ராஜ்யசபா, விசிலடித்த   எம்.பி.,க்கள் ', வெங்கையா ஆவேசம்


புதுடில்லி :''எம்.பி.,க்கள் சிலர் விசிலடிப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர்; எதற்கும் ஓர் எல்லை உண்டு,'' என, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு ஆவேசமாக கூறினார்.'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரது மொபைல் போன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.


அறிக்கை தாக்கல்



இந்த பிரச்னையை முன் வைத்து பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. லோக்சபாவில் நேற்று காலை, கேள்வி நேரத்தை நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயற்சித்தார். எதிர்க்கட்சிகளின் அமளியால் அது நடக்கவில்லை.அப்போது பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை விவாதிக்க வேண்டியுள்ளது. விவாதம் நடத்தாமல் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு விரும்பவில்லை.

கேள்வி நேரத்தை நடத்த, 315க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் விரும்புகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.,க்களால் தினமும் பிரச்னை எழுகிறது.போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி இரு சபைகளிலும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அப்படியிருந்தும் அமளி செய்வது துரதிர்ஷ்டவசமானது.இவ்வாறு அவர் கூறினார்.


சபை ஒத்திவைப்பு



ஆனாலும் அமளி தொடர்ந்ததால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.மீண்டும் கூடியபோது அமளிக்கு இடையே பொதுகாப்பீடு மற்றும் காற்று தரக்கட்டுப்பாடு குறித்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதும் அமளி தொடர்ந்தால் ஆக., 2 வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.ராஜ்யசபாவும் நேற்று காலை, அமளியுடன் துவங்கியது. சபையில் அமைதியை ஏற்படுத்த சபைத்தலைவர் வெங்கையா நாயுடு எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.


அமளி



சபை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியதும் கேள்வி நேரம் துவங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே அமைச்சர் ஒருவர் பதில் அளிக்க துவங்கினார். அவரை பேச விடாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விசிலடித்து அமளியில் ஈடுபட்டனர்.இதனால் கோபம் அடைந்த சபைத் தலைவர்வெங்கையா நாயுடு கூறியதாவது:
சபையின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் பாதுகாக்கும் கடமை அனைத்து எம்.பி.,க்களுக்கும் உள்ளது.அமைச்சர் பேசும் போது அதை தடுக்கும் விதமாக எம்.பி.,க்கள் சிலர் விசில் அடிப்பது அநாகரிகமானது.மேலும் சில எம்.பி.,க்கள் போஸ்டரை காட்டி அமைச்சரை பேசவிடாமல் தடுக்கின்றனர். சிலர் சபை காவலர்களின் தோள்களில் கையை போட்டு அரட்டை அடிக்கின்றனர்.


வரிப்பணம் வீண்



இதுபோன்ற நடவடிக்கைகள் சபையின் கவுரவத்தை சீரழிக்கின்றன. எதற்கும் ஓர் எல்லை உண்டு. சபையின் பொறுமையை சோதிக்கக் கூடாது.இப்போது என்னிடம் இரண்டு வழிகள் தான் உள்ளன. ராஜ்யசபாவை சந்தையாக மாற்றுவது அல்லது சபை கவுரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது. இதில் எது வேண்டும் என உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் ராஜ்யசபாவும், 2ம்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.பார்லி., கூட்டத்தொடரின் முதல் வாரம் போலவே இரண்டாவது வாரமும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் முற்றிலும் முடங்கி, மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டு
உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
31-ஜூலை-202121:43:50 IST Report Abuse
bal ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202121:12:00 IST Report Abuse
oce தேர்தல்களில் நல்லவர்களை விட கெட்ட ஆட்களே அதிகம் நிற்பதால் அவர்களது தகாத போக்கு பாராளுமன்றம் சட்டமன்றங்களிலும் ஆட்சி அதிகாரங்களிலும் நடத்தும் ஊழல்களிலும் எதிரொலிக்கிறது. மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நியாயமான ஆட்களை தேர்ந்தெடுத்தால் நாட்டின் வறுமை அகன்று நாடு விரைவில் முன்னேறும்தேர்தல்களில் வேட்பாளர்களின் தராதரங்களை வாக்காள மக்கள் வாக்குச்சாவடிக்குள் அங்கங்கு வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202120:53:53 IST Report Abuse
oce மின்னணு இயந்திர வாக்குப்பெட்டிகளில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் சின்னங்கள் பக்கத்தில் அவர்களது யோக்யதாம்சங்களையும் பார்த்து வாக்காளர் வாக்களிக்கும்படி செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X