எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பென்னிகுக் வசித்த இடத்தில் நூலகம்? :மதுரை கலெக்டர் ஆதாரத்துடன் விளக்கம்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
''மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நுாலகம் அமைக்க தேர்வான பொதுப்பணித் துறை கட்டடத்தில், ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை,'' என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.'மதுரையில், 70 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் நுாலகம் அமைக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 2 லட்சம் சதுர அடியில்,
 பென்னிகுக் வசித்த இடம் நுாலகம்? , :மதுரை கலெக்டர் ஆதாரத்துடன் விளக்கம்


''மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நுாலகம் அமைக்க தேர்வான பொதுப்பணித் துறை கட்டடத்தில், ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை,'' என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

'மதுரையில், 70 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் நுாலகம் அமைக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 2 லட்சம் சதுர அடியில், எட்டு மாடிகளுடன் 6 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட உள்ளது.

இதற்காக ஏழு இடங்களை ஆய்வு செய்த நிலையில், தற்போது புது நத்தம் ரோடு பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த கட்டடம், முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் பென்னிகுக் நினைவு இல்லம் என்பதால், அங்கு நுாலகம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது:
நுாலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள குடியிருப்பில் பென்னிகுக் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர் 15.1.1841ல் பிறந்து 9.3.1911ல் காலமாகியுள்ளார். பொதுப்பணித் துறை ஆவணங்களை பரிசீலித்ததில் இந்த கட்டடமானது 1912ல் பூமி பூஜை செய்யப்பட்டு, 1913ல் கட்டி முடிக்கப்பட்டதாக பொது கட்டட பதிவேடு எண் 159/1ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பென்னிகுக் மறைந்த காலத்திற்கு பின் கட்டப்பட்ட கட்டடம் என்பதால், அதில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

எதிர்ப்பு இல்லாத இடம்

முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:
விவசாயிகளுக்கு பென்னிகுக் செய்த தியாகத்தை, வரலாற்றை அழிக்கக் கூடாது. இப்பிரச்னை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளதா என தெளிவுபடுத்த வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவமனைகள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடங்கள் கட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு மண்டபம் அமைக்க, ஒரு மணி நேரத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. மதுரைக்கு பெருமை சேர்ப்பதாக நுாலகம் அமைக்க அரசு விரும்பினால், விவசாயிகள் எதிர்ப்பில்லாத இடத்தை கண்டறிய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
***

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
31-ஜூலை-202113:32:18 IST Report Abuse
Dhurvesh இந்த உதயகுமார் இதற்க்கு இவ்வளவு மெனக்கெடுவதற்கு 4 வருடம் முன்னர் AIIMS க்கு இடம் சொல்லி இருந்தால் இந்நேரம் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் , அப்போ கிளிகளை இப்போ வந்து முட்டுது இது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஜூலை-202110:28:22 IST Report Abuse
duruvasar மதுரைகிளை உயர்நீதிமன்ற வளாகம் கட்டுவதற்க்கு அடிக்கல் நாட்டுவதற்க்கு முன்பு அங்கு விவசாயம் நடந்ததற்கான எந்த ஆதாரமமோ, வடிகாலாக இருந்ததற்கான ஆதாரமோ கிடைக்கவில்லை. ஆகையால் அது ஏரிபடுகை இல்லை என கருதியே அங்கு வளாகம் கட்டுப்பட்டது. இதுபோல வளர்ச்சி பணிகளை பிடிக்காத காழ்ப்புணர்ச்சி கொண்ட பெருசுகள் அவிழ்த்து விடும் கட்டுகதைகளை அரசு புறந்தள்ளி வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
31-ஜூலை-202107:26:50 IST Report Abuse
GANESUN மெரினா கடற்கரைகூடத்தான் சுடுகாடு என்பதற்கு ஆதாரமில்லை ஆனால் திராவிஷ கட்சிகள்தான் சுடுகாடு ஆக்கின.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
31-ஜூலை-202113:30:45 IST Report Abuse
Dhurveshஒருத்தன் உயிரோடு இருக்கும்போதே படேல் stadium பேரை தன பேருக்கு மாற்றிக்கொண்டான் , இது எவ்வளவு கேவலம்...
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
31-ஜூலை-202114:04:12 IST Report Abuse
duruvasarஅறிவே இல்லாதவன் தான் இரூக்கும் இடத்திற்கு அறிவு இல்லம்னு பேர் வெச்சிக்கிறானு ங்க இல்லையா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X