பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., தேர்வில் திருநங்கை

Added : ஜூலை 31, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை போலீஸ் எஸ்.ஐ.யாக தேர்வு பெற்றுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல். இவரது மனைவி வளர். தம்பதியின் மகள் திருநங்கை சிவன்யா 31; பி.காம். பட்டதாரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் செல்வவேல் இறந்தார். திருவண்ணாமலையில் தனியார் போலீஸ் பயிற்சி மையத்தில் சிவன்யா படித்து

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை போலீஸ் எஸ்.ஐ.யாக தேர்வு பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல். இவரது மனைவி வளர். தம்பதியின் மகள் திருநங்கை சிவன்யா 31; பி.காம். பட்டதாரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் செல்வவேல் இறந்தார். திருவண்ணாமலையில் தனியார் போலீஸ் பயிற்சி மையத்தில் சிவன்யா படித்து வந்தார். தற்போது போலீஸ் எஸ்.ஐ. தேர்வில் வெற்றி பெற்று பணியாணை பெற்றார்.

இதுகுறித்து சிவன்யா கூறியதாவது: சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் அரசு பள்ளி கல்லுாரிகளில் சிரமத்துக்கு இடையே படித்தேன். திருநங்கையான என்னை குடும்பத்தினர் ஒதுக்கி வைக்காமல் அரவணைத்து வளர்த்தனர். போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது கனவு. தற்போது நிறைவேறியுள்ளது. குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி.யாக வேண்டும். இது என் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ.யாக பொறுப்பேற்ற நிலையில் இரண்டாவதாக சிவன்யா எஸ்.ஐ.யாக தேர்வாகி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X