பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் அரசின் தொடர் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது; அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.இந்நிலையில் சென்னை செங்கல்பட்டு கோவை உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது.

சென்னை:தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

தமிழகத்தில் அரசின் தொடர் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது; அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.இந்நிலையில் சென்னை செங்கல்பட்டு கோவை உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன் 120 ஆக இருந்த தொற்று பாதிப்பு 180 வரை உயர்ந்துள்ளது.

இதேநிலை தொடர்ந்தால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை மக்கள் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தி இருக்கிறோம். வெளிநாடுகளிலும் கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மூன்றாம் அலை தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று முற்றிலும் அழியவில்லை என்பதையே அது காட்டுகிறது. இதை ஒரு எச்சரிக்கை மணியாக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பணியாற்றும் இடங்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் மக்கள் சற்று அலட்சியமாக இருப்பதால் 20 மாவட்டங்களில் சிறு சிறு பகுதிகள் அளவில் தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா உருமாறுவதை நம்மால் தடுக்க முடியாது. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதன் வாயிலாகவும் முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிப்பதன் வாயிலாகவும் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-202114:34:12 IST Report Abuse
vpurushothaman சினிமாக் கொட்டகையைத் தவிர எல்லாத்தையும் திறந்தாச்சு. இனி தளருதுக்கு என்ன இருக்கு. தளர்வு தொடர நீட்டிக்கச் சொல்லிட்டாரு. அலை பரவாமல் என்ன செய்யும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X