அரசியல் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடருமா?

Updated : ஆக 01, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை :''தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை நீட்டிப்பது குறித்து, முதல்வர் முடிவெடுப்பார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.பரிசோதனைஉலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கருவில் உள்ள குழந்தைகளுக்கு
தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஆக்சிஜன் உற்பத்தி,

சென்னை :''தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை நீட்டிப்பது குறித்து, முதல்வர் முடிவெடுப்பார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
பரிசோதனை

உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை துவக்கி வைத்த, அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மாவட்ட கலெக்டர்களிடம் பேசி வருகிறோம்.
கேரளாவில் வீடுகளில் தங்கி சிகிச்சை பெறும் முறையால், தொற்று பாதிப்பு உயர்கிறது. பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது வருத்தம் அளிக்கிறது. பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில், ஓ.பி.சி., இட ஒதுக்கீடு மிகவும் பயனளிக்கும்.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால், எல்லையில் தேவையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பது குறித்து, முதல்வர் முடிவெடுப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.


மருத்துவ திட்டம்

மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''மக்களை தேடி மருத்துவ திட்டத்தை, வரும் 5ம் தேதி கிருஷ்ணகிரி, சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் துவக்கி வைக்கிறார். இத்திட்டம், பழங்குடியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கொரோனா கட்டுப்பாட்டு துறை அதிகாரி தாரேஷ் அகமது, பொது சுகாதாரத்துறை இயக்குனர்
செல்வ விநாயகம், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் விஜயா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
31-ஜூலை-202122:37:18 IST Report Abuse
Nagercoil Suresh இடைவெளி, தடுப்பூசி, முகக்கவசம் மூன்டையும் கடைபிடியுங்கள் எந்த அலையும் எட்டி கூட பார்க்காது..."முதல்வர் முடிவெடுப்பார் என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்" அதோடு நிறுத்திக்கொள்ளவது தான் நல்லது...குஜராத்தில் நிறைய இடம் சும்மாவே இருப்பதனால் லண்டன் முதலாளி அங்கு இதை கழட்டிக்கொண்டு போய் துவங்கலாமே...
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202119:48:23 IST Report Abuse
 rajan தொடராது என்று கனி அக்கா சொல்லிட்டாங்க. மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் கனிமொழி சொல்லிட்டாங்க......வேதாந்தா நிறுவனம் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக தருவதற்கு தானாகமுன் வந்த நோக்கம் வெற்றி பெறவில்லை. மீண்டும் அவர்களை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அழைத்தால் கூடவே காப்பர் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற புரிதலுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். நம்மிடம் காப்பர் உற்பத்தி செய்ய ஆலை இருக்கையில் சீனாவுக்கு சாதகமாக அங்கிருந்து இறக்குமதி செய்வதால், காப்பர் சம்பந்தப்பட்ட பொருள்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. நமக்கு நாமே துரோகம் செய்து கொள்வது நியாயம் இல்லை. காப்பர் ஆலையை மூடிவிட்டதால், வேலை இழந்த பல குடும்பங்களுக்கு அரசு என்ன நிவாரணம் தந்தது. பழனிச்சாமி அரசு கிறித்தவர்களுக்கு பயந்து கொண்டு ஆலையை மூடி பல குடும்பங்களுக்கும் நாட்டிற்கும் துரோகம் செய்தார். அதன் பலனை அனுபவிக்கிறார். கிறிஸ்தவர்கள் இவருக்கு நல்ல பாடம் புகட்டி விட்டனர். சொந்த ஆதாயத்திற்காக தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். வேலை இழந்த பல தொழிலாளர்களின் குடும்பத்தின் சாபங்களுக்கு இவர்கள் ஆளாகி ஏதாவது ஒருவிதத்தில் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
31-ஜூலை-202111:42:51 IST Report Abuse
vbs manian latest செய்தி. இணைய தளத்தில் உள்ளது. அமெரிக்கா னாய் தடுப்பு கழகம் சொல்வது. இப்போது நடைமுறையில் உள்ள delta variant மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கும். சிநாம்மை போன்று வெகு வேகமாக பரவும். தாக்கம் அதிகம் இருக்கும். இந்த சூழ்நிலையில் ஆக்சிஜென் தயாரிக்கும் ஆலையை மூடலாமா. சிந்தியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X