'எச் - 1பி' விசாக்கள் வழங்க மீண்டும் லாட்டரி குலுக்கல்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன் : 'எச் - 1பி' விசா வழங்குவதற்கு, இரண்டாவது முறையாக லாட்டரி குலுக்கல் முறையில் விண்ணப்பங்களை தேர்வு செய்ய, அமெரிக்க குடியுரிமை சேவைகள் அமைப்பு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி பணிபுரியும் வெளிநாட்டினருக்கு, எச் - 1பி மற்றும் எச் - 4 உள்ளிட்ட விசாக்கள் வழங்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த இந்தியர்கள் இந்த

வாஷிங்டன் : 'எச் - 1பி' விசா வழங்குவதற்கு, இரண்டாவது முறையாக லாட்டரி குலுக்கல் முறையில் விண்ணப்பங்களை தேர்வு செய்ய, அமெரிக்க குடியுரிமை சேவைகள் அமைப்பு முடிவு செய்துள்ளது.



latest tamil news



அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி பணிபுரியும் வெளிநாட்டினருக்கு, எச் - 1பி மற்றும் எச் - 4 உள்ளிட்ட விசாக்கள் வழங்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த இந்தியர்கள் இந்த விசாக்களை அதிக அளவில் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆட்சிக் காலத்தில் இந்த விசாக்களை பெற, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். தற்போதைய அதிபர் ஜோ பைடன் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறார். இதையடுத்து அடுத்த நிதியாண்டிற்காக 'ஆன்லைன்' வாயிலாக ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.


latest tamil news



அதிலிருந்து பல விண்ணப்பங்கள் லாட்டரி குலுக்கல் முறையில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டன.அடுத்த நிதியாண்டிற்கு கூடுதல் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவேண்டி உள்ளது. அதற்காக, இரண்டாவது முறையாக லாட்டரி குலுக்கல் முறையில் விண்ணப்பங்களை தேர்வு செய்ய, அமெரிக்க குடியுரிமை சேவைகள் அமைப்பு முடிவு செய்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
31-ஜூலை-202112:15:12 IST Report Abuse
pradeesh parthasarathy தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த இந்தியர்கள் பெரும்பாலானோர் பிஜேபி ஆதரவாளர்கள். இவர்கள் மீண்டும் டிரம்ப் ஆட்சிக்கு வருவதையே ஆதரித்தனர். ஆனால் அவர்களுக்கு உதவுவது என்னவோ ஜோ பைடன் அரசு தான். அது சரி ...நாட்டில் எதற்கு குடியுரிமை பெற வேண்டும்... போனமை வேலையாய் பார்த்தமா ...மீண்டும் இந்தியாவுக்கு வரவேண்டியது தானே ... சங்கிகளுக்கு பொழைப்பு நடத்த கிறிஸ்தவ நாடுகள் .... கேட்டால் இங்குள்ள கிறிஸ்தவர்களை ரொட்டி துண்டுக்கு மதம் மாறினை என்கிற பரிகாசம் வேறு ... அனால் இவனுங்க ரொட்டி துண்டு வேண்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கா தூதரகம் முன்பு மணிக்கணக்கில் காத்து கிடைப்பானுங்க பாருங்க ....
Rate this:
Cancel
31-ஜூலை-202109:32:44 IST Report Abuse
அப்புசாமி அமெரிக்கா போக படிப்பு, அறிவு மட்டும் போறாது. அதிருஷ்டமும் வேணும் போலிருக்கு.
Rate this:
Cancel
31-ஜூலை-202109:32:34 IST Report Abuse
அப்புசாமி அமெரிக்கா போக படிப்பு, அறிவு மட்டும் போறாது. அதிருஷ்டமும் வேணும் போலிருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X