பேராசிரியர் விருப்ப இடமாறுதல் விரைந்து முடிக்க அரசு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேராசிரியர் விருப்ப இடமாறுதல் விரைந்து முடிக்க அரசு உத்தரவு

Added : ஜூலை 31, 2021
Share
சென்னை:கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளதால், அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் பணிகளை விரைந்து முடிக்க, கல்லுாரி கல்வி இயக்குன ருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லுாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கல்லுாரி மாணவர்களுக்கு வீட்டிலேயே தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.மாணவர் சேர்க்கைஇதையடுத்து,

சென்னை:கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளதால், அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் பணிகளை விரைந்து முடிக்க, கல்லுாரி கல்வி இயக்குன ருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லுாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கல்லுாரி மாணவர்களுக்கு வீட்டிலேயே தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.


மாணவர் சேர்க்கை

இதையடுத்து, கல்லுாரிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.அதேபோல, முந்தைய ஆண்டு மாணவர்களுக்கு, அடுத்த செமஸ்டர் தேர்வுக்கான வகுப்புகள், 9ம் தேதி முதல் துவங்க உள்ளன.இந்நிலையில், கல்லுாரிகளில் இரண்டு ஆண்டுகளாக இடமாறுதல் நடக்காததால், பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் நடவடிக்கைகள் தீவிரமாகிஉள்ளன.

மாநிலம் முழுதும் உள்ள 143 கல்லுாரிகளிலும் உள்ள உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு மாறுதல் வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.கடந்த வாரம் முதல் இதற்கான பணிகள் துவங்கி, பேராசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.வாய்ப்புஉயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துறை செயலர் கார்த்திகேயன் ஆகியோரது அலுவலகங்களுக்கு வரும் விண்ணப்பங்கள், கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரனுக்கு அனுப்பப்பட்டு, இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இடமாறுதல் பெற முடியாத பேராசிரியர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.கொரோனா தொற்று குறைந்து, விரைவில் கல்லுாரிகள் திறக்கப்படஉள்ளதால், அதற்கு முன் இடமாறுதல் பணிகளை முடிக்குமாறு, கல்லுாரி கல்வி இயக்குனருக்கு, உயர்கல்வி துறையில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது என, இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X