பொது செய்தி

இந்தியா

இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் 12வது சுற்று பேச்சுவார்த்தை

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி :இந்திய - சீன எல்லையில் படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவ கமாண்டர்கள் அளவிலான 12வது சுற்று பேச்சுவார்த்தை இன்று(ஜூலை 31) காலை 10:30 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை அடுத்து இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு நாட்டு
சீன ராணுவம் ,  இந்தியா, பேச்சுவார்த்தை

புதுடில்லி :இந்திய - சீன எல்லையில் படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவ கமாண்டர்கள் அளவிலான 12வது சுற்று பேச்சுவார்த்தை இன்று(ஜூலை 31) காலை 10:30 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை அடுத்து இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சில், படைகளை விலக்கி கொள்ள இரு தரப்பும் சம்மதித்தன.


latest tamil news



எல்லையின் மிக முக்கிய நிலைகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டன. கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஸோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருதரப்பு படைகளும் விலக்கி கொள்ளப்பட்டதாக, இந்தியாவுக்கான சீன துாதர் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் ராணுவ கமாண்டர்கள் அளவிலான, 12வது சுற்று பேச்சு இன்று காலை 10:30 மணிக்கு துவங்கியது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் மோல்டோ என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கோக்ரா மற்றும் மலைசிகரங்களில் படைகள் திரும்ப பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202118:48:22 IST Report Abuse
oce சீன பயலிடம் எத்தனை தடவ பேச்சு வார்த்தை நடத்துவீங்க.அவன் எப்போதும் எதையும் நூடுல்ஸ் குச்சிய வாயில் வைத்து இழுக்கற மாதிரி இழுப்பான். சோறு தின்னா புத்தி இருக்கும். இந்தியாவில் உள்ள சீன உணவகங்கள் சீன எலக்ட்ரானிக் பொருட்களை விற்கும் கடைகளை இழுத்து மூடுங்கள்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
31-ஜூலை-202110:53:04 IST Report Abuse
RajanRajan லடாக் மோதல்களின் போது, ​​OFB இன் 80,000 ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முதலில் அறிவித்தனர். Ofb என்பது இந்திய இராணுவத்திற்கு வெடிமருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் குழுமம். இதன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது. ஆங்கிலேயர்களின் காலத்திலிருந்து, அதன் தொழிலாளர் சங்கங்கள் கம்யூனிஸ்டுகளின் பிடியில் உள்ளனர். அனைத்து கம்யூனிஸ்டுகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக உள்ளனர்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-202110:20:40 IST Report Abuse
Kasimani Baskaran பாக்கிஸ்தானை அடித்தால் இவர்களுக்கு வெகுவாக வலிக்கும். அதைவிட்டுவிட்டு இவர்களிடம் பேச்சுவார்த்தை என்பது அபத்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X