அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : வெற்றிக்கொடி நாட்டும் பீஹாரி!

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (95)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'பீஹாரிகளுக்கு நம்மை விட மூளை அவ்வளவாக இல்லை. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 4,000 பேர் பீஹாரிகள் வேலை பார்க்கின்றனர். லாலு பிரசாத் யாதவ் ரயில்வே மந்திரியா இருந்த போது, அவர் ஊர் மக்களை எல்லாம், 'பிட்' அடிக்க

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'பீஹாரிகளுக்கு நம்மை விட மூளை அவ்வளவாக இல்லை. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 4,000 பேர் பீஹாரிகள் வேலை பார்க்கின்றனர். லாலு பிரசாத் யாதவ் ரயில்வே மந்திரியா இருந்த போது, அவர் ஊர் மக்களை எல்லாம், 'பிட்' அடிக்க வைத்து 'பாஸ்' ஆக்கி வேலைக்கு சேர்த்து விட்டார். இவர்களுக்கு தமிழும் தெரியாது; ஹிந்தியும் தெரியாது...' இப்படி சொல்லியிருப்பவர் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு.latest tamil newsதமிழக முதல்வர் முதல் தி.மு.க., பேச்சாளர்கள் வரை அனைவரும் எப்படிப்பட்ட தமிழ்அறிஞர்கள்! கையில் துண்டு சீட்டு கூட வைத்து கொள்ளாமல் மணிக்கணக்காய் தமிழில் சொற்பொலிவோடு சொற்பொழிவாற்ற கூடிய சான்றோர் பெருமக்கள் அல்லவா அவர்கள்! தமிழகம் எங்கும் லட்சக்கணக்கான பீஹாரிகள் வேலை பார்க்கின்றனர். அவர்கள் அனைவரும் கால் மேல் கால் போட்டு வேலை பார்க்கும் அதிகாரிகள் அல்ல. உடல் உழைப்பு செய்து வயிறு வளர்க்க வந்துள்ள அந்த பாமரர்களுக்கு தமிழும், ஹிந்தியும் ஒன்று தான். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு மட்டும் தான்.

அவர்களை போல நம் இளைஞர்கள் கடினமான வேலைகளை செய்ய முன்வருகின்றனரா? தமிழக இளைஞர்கள் வேலைக்கு வர மாட்டேன் என்கின்றனர்; அதனால் வட மாநிலத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, இங்கு வேலை செய்ய வைக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


latest tamil newsஅவர்கள் மொழி கற்று கொள்ள, இங்கு வரவில்லை. தன் குடும்பத்தின் பசி போக்க வந்துள்ளனர். உயர்ந்த பதவியில் இருக்கும் நபர்களுக்கே சேக்கிழாருக்கும், கம்பருக்கும் வித்தியாசம் தெரியாத போது, படிக்காத அந்த தொழிலாளர்களின் அறிவை விமர்சிப்பது அநாகரிகமானது.அமைச்சர் நேரு கணக்குப்படி மூளைஇல்லாத பீஹாரி தான் பிழைக்க தெரிந்த புத்திசாலி. மொழி தெரியாவிட்டாலும் வெற்றிக்கொடி நாட்டுகிறான்.

இங்கு சாலை போடுவது முதல் சலவை செய்வது வரை, எல்லாவற்றிற்கும் அவர்களின் தயவு வேண்டியிருக்கிறது. தமிழன் வாய் சொல்லில் வீரன்; வேலைக்கு ஆக மாட்டான். உழைத்து பிழைக்கும் வேற்று மாநிலத்தோருக்கு மூளை இருக்கா, இல்லையா என்ற ஆராய்ச்சியை விடுத்து, பிறரை ஏய்த்து பிழைக்கும் கூட்டம், தங்கள் முதுகின் அழுக்கை முதலில் துடைத்துக் கொள்ளட்டும்.

Advertisement
வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
31-ஜூலை-202123:01:30 IST Report Abuse
Rajas தமிழர்கள் வேலை செய்யவில்லை என்று சொல்லி கொள்வது இப்போது ஒரு பேஷன். வட இந்தியர்களை இங்கே கொண்டு வருவதற்கு காரணமே உழைப்பு சுரண்டல் தான். வேறு ஒன்றுமில்லை. வட இந்தியர்களுக்கு வேலை கொடுப்பவர்களை கவனியுங்கள். கம்பனியாக இருந்தால் Minimum Wages தர மாட்டார்கள். அதில் பாதியை தான் தருவார்கள் அதுவம் 12 மணி நேர வேலைக்கு. வார விடுமுறை இருக்காது. போனஸ் கொடுக்க மாட்டார்கள். PF, ESI என எதுவும் இருக்காது. அவனுக்கு அடி பட்டால் கூட கேட்பதற்கு ஆள் இருக்காது. தனிப்பட்ட ஆட்களிடம் வேலை பார்க்கும் வட இந்தியர்களின் நிலைமை இன்னமும் மோசம். உள்ளூரில் இருப்பவனுக்கு வேலை கொடுத்தால் அரசு வழிமுறைப்படி எல்லாமே கொடுக்க வேண்டும். கணக்கு போட்டால் தமிழர்கள் வேலை செய்வது இல்லை என்ற கோசத்திற்கு காரணம் தெரிந்து விடும்.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
31-ஜூலை-202122:40:19 IST Report Abuse
Swaminathan Chandramouli நமது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை செய்வது என்பது வேப்பங்காய் உண்ணுவது போல ஒரு காலத்தில் விவசாய வேலைகளை பெண்டிரும் வயதான விவசாயிகளும் மட்டுமே செய்து கொண்டிருந்தனர் இளைஞர்கள் வேடிக்கை பார்த்து கொண்டு முதியவர்களை மிரட்டி சினிமா போவதற்கு காசை அவர்களிடம் இருந்து பிடுங்கி ஓட்டமும் நடையுமாக டென்ட் கொட்டாயை நோக்கி ஓடுவார்கள் இவர்கள் வேலை செய்ய லாயக்கு இல்லாதவர்கள் என்று தெரிந்தவுடன் பசி பட்டினி காரணமாக பீகார் , உத்திரபிரதேசம் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து சாரி , சாரியாக தெற்கு பக்கம் படையெடுத்து தமிழகம் , ஆந்திர கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு குடும்பத்துடன் ஊடுருவி தங்கள் பசி , பட்டினியை போக்க எந்த விதமான வேலைகள் கொடுக்கப்பட்டாலும் கணவன் , மனைவி மற்றும் குழந்தை குட்டிகளுடன் வேலை செய்யும் இடத்துக்கே சென்று காலையில் இருந்து இருட்டும் வரை வேலை செய்வார்கள் முக்கியமாக கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டுதல் ட்ரைனேஜ் வேலை கட்டிடம் கட்ட செங்கல், மற்றும் மணல் , ஜல்லிக்கற்களை சுமந்து செல்லுதல் சிமெண்ட் மூட்டைகளை சுமப்பது பெண்களின் வேலை நாடு நடுவே குழந்தைகளுக்கு பசி வந்தால் பால் கொடுப்பது . இடைவேளையில் தாங்கும் இடங்களில் கோதுமை ரொட்டி , ஏதாவது ஊறுகாய் இவற்றை துணியில் கட்டி வேலை செய்யும் இடத்துக்கு கொண்டு வந்து இடைவேளை நேரத்தில் எல்லா குடும்பமும் ஒன்று சேர்ந்து உணவு அருந்துவார்கள் . ஒரு போதும் வேலை நேரத்தில் வெளியே சென்று ஊர் சுத்த மாட்டார்கள் ஒரு கேட்ட பழக்கம் என்னவென்றால் ஆண்கள் குட்கா , ஜர்தா வாய்க்குள் அடக்கி மெல்லுவார்கள் இந்த நல்ல பழக்கத்தை தமிழக இளைஞர்கள் பழக்கி கொண்டுவிட்டார்கள் ஆனால் வடநாட்டவர்கள் போல கட்டிட வேலைக்கோ , விவசாய வேலைக்கோ ஒரு நாள் கூட இறங்கி வேலை செய்தது இல்லை வடநாட்டவர்கள் UP பிஹார் . மேற்கு வங்கம் ராஜஸ்தான் முதலிய இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேலை தேடி நாளா வட்டத்தில் தாங்களே வேலை செய்யும் இடதுக்கு பக்கத்தில் குடிசை போட்டு கொண்டு இரவு நேரத்தில் உறங்குவார்கள் நம்ம பையன்கள் போல ஓபி அடிக்க மாட்டார்கள் நம்ம பையன்கள் யார் வீடு திண்ணைலாவது உட்க்கார்ந்து கொண்டு தெருவில் போகும் பெண்களை ஆபாசமாக பேசி கண்ணடித்து வம்பு செய்வார்கள் , வீடிற்கு ஒரு பைசா கொடுக்க மாட்டார்கள் இந்த மந்திரி நேரு பீஹாரிகளுக்கு மூளை கம்மி என்று சர்டிபிகேட் கொடுக்கிறார் இவர்கள் போல ஒங்க ஊர் பசங்களை வேலை செய்ய செய்ய சொல்லுங்கள் நேரு அவர்களே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அரை வேக்காட்டு தனமாக பேச கூடாது
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
31-ஜூலை-202122:37:51 IST Report Abuse
Rajas மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றியுள்ளன. இங்கெல்லாம் பிஜேபி தான் ஆட்சியில் உள்ளது. அதே போல ஒரு சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஏன் பிஜேபி சொல்லவில்லை. முந்தய அதிமுக ஆட்சி அவர்களின் சொல்படி தானே நடந்தது. கவர்னருக்கு தமிழக யூனிவெர்சிட்டிகளில் அதிக அதிகாரம் இருக்க வேண்டும் என்று அதிமுக அரசை கேட்டு சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததை போல இதையும் கொண்டு வந்திருக்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X