சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. ஊரப்பாக்கத்தில் 25 சவரன் திருட்டுகூடுவாஞ்சேரி : ஊரப்பாக்கத்தில், தனியார் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் நகைகள் திருடிச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம் சொக்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 33.குடும்பத்தோடு உறவினர் வீட்டிற்கு சென்னைக்கு சென்ற கார்த்திக்கை, பக்கத்து

தமிழக நிகழ்வுகள்
1. ஊரப்பாக்கத்தில் 25 சவரன் திருட்டு
கூடுவாஞ்சேரி : ஊரப்பாக்கத்தில், தனியார் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் நகைகள் திருடிச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம் சொக்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 33.குடும்பத்தோடு உறவினர் வீட்டிற்கு சென்னைக்கு சென்ற கார்த்திக்கை, பக்கத்து வீட்டுக்காரர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்டு வீடு திறந்து கிடப்பதாக கூறினர்.அவர் வந்து பார்த்தபோது, பீரோவிலிருந்த 25 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், 2,500 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.கார்த்திக் புகாரை, போலீசார் விசாரிக்கின்றனர்.



latest tamil news



2. 10 டன் 'குட்கா' பறிமுதல் கடத்தல் கும்பலுக்கு வலை
சேலம் : சேலத்தில் 10 டன் புகையிலை பொருட்கள், மூன்று லாரிகள், சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் கும்பலை, 'கோட்டை' விட்டனர்.

சேலம், ஊத்துக்காடு பி.எஸ்.எம்., லாரி ஸ்டாண்டில் 10 நாட்களாக இரு லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. துர்நாற்றம் வீசவே, மக்களின் தகவல்படி அன்னதானப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் மாலை, லாரிகளில் சோதனை நடத்தினர்.இதில், 248 மூட்டைகளில் 7,300 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு 1.42 கோடி ரூபாய். லாரியுடன் பறிமுதல் செய்து, கடத்தல் கும்பல், லாரி உரிமையாளர்களை தேடுகின்றனர்.


latest tamil news



நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அம்மா பேட்டையில் போலீஸ் ரோந்து வாகனம் சென்றபோது, அங்கு லாரியில் இருந்து சரக்கு ஆட்டோவுக்கு மூட்டைகள் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. போலீசார் சென்றபோது கும்பல் தப்பியது.சோதனையில், 72 மூட்டைகளில் 2,397 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு 33 லட்சம் ரூபாய். லாரி, சரக்கு ஆட்டோ, பொருட்களை பறிமுதல் செய்து, தப்பிய கும்பலை தேடுகின்றனர்.மொத்தம் 9.6 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் கும்பலை பிடிக்காமல் 'கோட்டை' விட்டது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கும்பலை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

3. 1.1 டன் செம்மரம் வண்ணையில் பறிமுதல்
கொருக்குப்பேட்டை : மினி வேனில் பதுக்கி வைத்திருந்த, 1.1 டன் செம்மரக்கட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

பழைய வண்ணாரப்பேட்டையில், செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு கண்காணித்தனர். இதில், முத்தையா முதலி தெருவில், கார் ஷெட்டில் நின்ற மினிவேனில் செம்மரக்கட்டைகள் இருந்தன.விசாரணையில், சுங்க இலாகாவில் இருந்து ஒப்புதல் பெறாமல் எடுத்து வந்தது தெரிந்தது. வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, தேனாம்பேட்டை வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.


latest tamil news


Advertisement


பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் எடை 1.1 டன் என்றும், மதிப்பு 5.5 லட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது. கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கார் ஷெட் மற்றும் மினிவேன் உரிமையாளரை தேடுகின்றனர்.

4. குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
விழுப்புரம் : வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


latest tamil news



விழுப்புரம், மாம்பழப்பட்டு ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் மலர்ராஜ், 18; இவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில், குண்டர் சட்டத்தில் மலர்ராஜ் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

5. கார் மோசடி; மூவர் கைது
குனியமுத்தூர் : ஆத்துபாலம் அடுத்த கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்தவர் ஹக்கீம், 39; இரும்பு வியாபாரி. இவர் தனது காரை, கடந்த, 17ல் ஷேக்முகமது என்பவருக்கு வாடகைக்கு கொடுத்தார்.
10 நாட்களுக்கு மேலாகியும், காரை ஷேக்முகமது ஒப்படைக்கவில்லை.ஹக்கீம் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். ஷேக்முகமதுவிடம் விசாரித்தபோது, காரை மதுக்கரையை சேர்ந்த நியாஸ், 24 என்பவரிடம் கொடுத்து, ரொக்கம் பெற்றது தெரிய வந்தது.நியாஸை பிடித்து விசாரித்தபோது, அமீர்பாஷாவை கை காட்டியுள்ளார். அமீர்பாஷா, செல்வபுரத்தை சேர்ந்த ஜீவகுமார் என்பவரிடம் பிட்டிங் வைத்தது தெரிந்தது.மேலும் ஜீவகுமார், காருடன் திருநெல்வேலியில் இருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து மூவரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஜீவகுமாரை பிடிக்க, போலீசார் திருநெல்வேலிக்கு சென்றுள்ளனர்.


latest tamil news



இந்தியாவில் குற்றம் :
பி.எஸ்.எப்., - எஸ்.ஐ., கைது
பாங்கான்: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்திற்குள் சமீபத்தில் சட்டவிரோதமாக புகுந்த வங்கதேச பெண்கள் இருவர், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கினர்.


latest tamil news



விசாரணைக்காக அழைத்து சென்று, அவர்களில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், எல்லை காவல் படை எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். \


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X