ஸ்டெர்லைட் மனு அடுத்த வாரம் விசாரணை

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி கோரி, வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.கொரோனா வைரசின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது, பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழகத்தின் துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள

புதுடில்லி : ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி கோரி, வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது, பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழகத்தின் துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க ஏப்., 29ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மூன்று மாதங்களுக்கு, ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அப்போது அனுமதி வழங்கப்பட்டது.பின், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தியும் துவங்கியது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட மூன்று மாத கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.


latest tamil news



இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி வழங்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் நேற்று வேதாந்தா குழுமம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஷா அடங்கிய அமர்வு முன் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - Bangalore,இந்தியா
31-ஜூலை-202110:17:05 IST Report Abuse
Bala இது அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படியே ஆலை இயங்க வேண்டி பரீசீலக்கபட வேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஜூலை-202109:37:10 IST Report Abuse
duruvasar தமிழகம் ஆக்ஸிஜன் மிகு மாநிலமாகிவிட்டதாக மாசு அறிக்கை மூலம் தெரிகிறது. எனவே தமிழனுக்கு உபயோகப்படாத ஆக்ஸிஜனை வேறு யாருக்கும் தரக்கூடாது. ஆலையை மூட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். சீமான், வைகோ, கனிமொழி இவர்களின் தலைமையில் இயங்கும் வழிகாட்டுதல் குழு இந்த நல்ல முடிவை அரசுக்கு பரிந்துரைத்து தமிழர் உரிமையை காக்க வேண்டும். இந்த முடிவு மோடியின் சர்வாதிகார போக்கிற்க்கு தரும் சவுக்கடியாக இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X