ஹிமாச்சல் முதல்வருக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சிம்லா : 'ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குரை தேசியக் கொடி ஏற்ற அனுதிக்க மாட்டோம்' என, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.பஞ்சாப் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு, அமெரிக்காவை தளமாக வைத்து இயங்குகிறது.இவர்கள் தரப்பில், ஹிமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவைச்

சிம்லா : 'ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குரை தேசியக் கொடி ஏற்ற அனுதிக்க மாட்டோம்' என, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.



latest tamil news



பஞ்சாப் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு, அமெரிக்காவை தளமாக வைத்து இயங்குகிறது.இவர்கள் தரப்பில், ஹிமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலருக்கு, நேற்று காலை பதிவு செய்யப்பட்ட ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.


latest tamil news



அதில், தன்னை நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் என, அறிமுகம் செய்து கொண்டவர் கூறியதாவது:ஹிமாச்சலில் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜெய்ராம் தாக்குர் தேசியக் கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம். பஞ்சாபின் ஒரு பகுதியாக ஹிமாச்சல் இருந்தது.முதற்கட்டமாக பஞ்சாபை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அதன்பின், ஹிமாச்சல பிரதேசத்தையும் உறுதியாக கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
31-ஜூலை-202114:23:08 IST Report Abuse
pradeesh parthasarathy விவசாயிகள் போராட்டத்தின் பொது பிஜேபி யின் தொண்டர் நடிகர் ஒருவரே பிஜேபி யின் துணையோடு செங்கோட்டையில் காலிஸ்தான் கோடியை ஏற்றினார்கள் ... பின்னர் இவ்விஷயம் சமூகவலைத்தளங்கள் மூலம் வெளி வந்தது ... பிஜேபி பத்திரிகைகளின் துணையோடு இவ்விஷயத்தை அமுக்கி விட்டது ... அதை போன்று இதையும் பார்த்தால் போதும் ...
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
31-ஜூலை-202112:39:16 IST Report Abuse
Mayavan Mayavan நீங்க கவலை படாதீர்கள். காலிஸ்தானை மோடி அண்ணா காலி பண்ணிவிடுவார் சிறிது காலத்தில்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
31-ஜூலை-202112:35:08 IST Report Abuse
Dhurvesh காலீஷ்தானா இல்லை கொங்குஸ்தான என்று பாருங்கள், ஏன் எனில் இப்போ தான் கொங்குஸ்தான் என்று ஒரு கூட்டம் அலை மோதி அடக்க பட்டுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X