ஹிமாச்சல் முதல்வருக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்| Dinamalar

ஹிமாச்சல் முதல்வருக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (6)
Share
சிம்லா : 'ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குரை தேசியக் கொடி ஏற்ற அனுதிக்க மாட்டோம்' என, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.பஞ்சாப் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு, அமெரிக்காவை தளமாக வைத்து இயங்குகிறது.இவர்கள் தரப்பில், ஹிமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவைச்

சிம்லா : 'ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குரை தேசியக் கொடி ஏற்ற அனுதிக்க மாட்டோம்' என, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.



latest tamil news



பஞ்சாப் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு, அமெரிக்காவை தளமாக வைத்து இயங்குகிறது.இவர்கள் தரப்பில், ஹிமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலருக்கு, நேற்று காலை பதிவு செய்யப்பட்ட ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.


latest tamil news



அதில், தன்னை நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் என, அறிமுகம் செய்து கொண்டவர் கூறியதாவது:ஹிமாச்சலில் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜெய்ராம் தாக்குர் தேசியக் கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம். பஞ்சாபின் ஒரு பகுதியாக ஹிமாச்சல் இருந்தது.முதற்கட்டமாக பஞ்சாபை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அதன்பின், ஹிமாச்சல பிரதேசத்தையும் உறுதியாக கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X