மத்திய அமைச்சரின் பதிலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : 'மனிதக் கழிவுகளை அகற்றும்போது யாரும் இறந்ததாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு, சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றுவது 2013ம் ஆண்டு சட்டப்படி தடை

புதுடில்லி : 'மனிதக் கழிவுகளை அகற்றும்போது யாரும் இறந்ததாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு, சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.latest tamil newsமத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றுவது 2013ம் ஆண்டு சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களாக இதுவரை, 66 ஆயிரத்து 692 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், இந்த தொழிலில் ஈடுபடும் போது யாரும் உயிரிழந்ததாக எந்த புகாரும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsஇதற்கு சமூக ஆர்வலர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'சபாய் கர்மசாரி அந்தோலன்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெஷ்வாடா வில்சன் கூறியதாவது: கடந்த மார்ச்சில் லோக்சபாவில் பேசிய அமைச்சர் அதவாலே, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 340 பேர்இறந்ததாக தெரிவித்து உள்ளார். ஆனால், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும்போது விஷ வாயு தாக்கியோ, மற்ற காரணங்களாலோ மரணம் ஏற்படவில்லை என்று அமைச்சர்கூறுவது நியாயமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
31-ஜூலை-202114:46:16 IST Report Abuse
bal மனித கழிவுகள் சேராமல் ஆட்டோமேட்டிக்கா துப்புரவு செய்ய இதே கண்டனம் செய்யும் மக்கள் உதவ வேண்டியதுதானே...வீட்டுல நாறும்..இங்கு மட்டும் கண்டனம்...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
31-ஜூலை-202113:20:38 IST Report Abuse
S.Baliah Seer ராமதாஸ் அதுவாலே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
Rate this:
rajan - erode,இந்தியா
31-ஜூலை-202113:43:29 IST Report Abuse
rajanஅவர் இருக்கும் இடம் அப்படிப்பட்டது...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஜூலை-202112:06:00 IST Report Abuse
Pugazh V பொய்யான தகவல்கள் தந்து இந்திய மக்களை ஏமாற்றி வருவது பாஜக மட்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X