பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 887 எக்டேர் சாகுபடிக்கு அழைப்பு ; ரூ.3.98 கோடி மானியம்

Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை -மதுரை மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக 887 எக்டேரில் சாகுபடி செய்ய ரூ.3.98 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.\இத்திட்டத்தில் புதிதாக வீரிய ரக காய்கறிகள், மாஅடர் நடவு, கொய்யா அடர் நடவு, பப்பாளி சாகுபடி, உதிரிமலர்கள், கிழங்கு வகை மலர்கள், எலுமிச்சை, அத்தி மற்றும் டிராகன் பழங்கள் சாகுபடி செய்வதற்கு ரூ.1.79 கோடி நிதி
 மதுரையில் 887 எக்டேர் சாகுபடிக்கு அழைப்பு ; ரூ.3.98 கோடி மானியம்

மதுரை -மதுரை மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக 887 எக்டேரில் சாகுபடி செய்ய ரூ.3.98 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.\
இத்திட்டத்தில் புதிதாக வீரிய ரக காய்கறிகள், மாஅடர் நடவு, கொய்யா அடர் நடவு, பப்பாளி சாகுபடி, உதிரிமலர்கள், கிழங்கு வகை மலர்கள், எலுமிச்சை, அத்தி மற்றும் டிராகன் பழங்கள் சாகுபடி செய்வதற்கு ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 40 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. தனி நபருக்கு நீர் சேமிப்பு அமைக்க, நிழல் வலைக்குடில், நிலப்போர்வை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை இனத்தின் கீழ் ரூ.22.50 லட்சம், தேனீ காலனி பெட்டிகள் வளர்ப்பதற்கு 50 சதவீத மானியத்தில் ரூ.19.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.50 சதவீத மானியத்தில் குறைந்த செலவின வெங்காய சேமிப்பு கிடங்கு, சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.122.50 லட்சம், நடமாடும் காய்கறி விற்பனை வண்டிக்கு ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு வேளாண் விரிவாக்க மைய தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம் என துணை இயக்குனர் ரேவதி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202105:04:10 IST Report Abuse
Nepolian S hybrid மனித குலத்துக்கு கொடிய ஆபத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X