அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையினர் பட்டியலில் ஹிந்துக்கள்: அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
சென்னை : 'கன்னியாகுமரி மாவட்டத்தில், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். ஹிந்துக்களை அப்பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, ஹிந்து மக்கள் கட்சி தமிழக தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக சிறுபான்மை நல ஆணைய தலைவரிடம் மனு அளித்துள்ளார்.அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராகவும்,
சிறுபான்மையினர், ஹிந்துக்கள், அர்ஜுன் சம்பத்

சென்னை : 'கன்னியாகுமரி மாவட்டத்தில், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். ஹிந்துக்களை அப்பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, ஹிந்து மக்கள் கட்சி தமிழக தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக சிறுபான்மை நல ஆணைய தலைவரிடம் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராகவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராகவும் மாறிவிட்டனர். இதை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிபரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. எனவே, குமரி மாவட்டத்தில், ஹிந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்.


latest tamil news


மத சிறுபான்மையினருக்கான பாதுகாப்பையும், சலுகைகளையும், உரிமைகளையும் வழங்க வேண்டும். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக மாறிவிட்டதால், அந்த மாவட்டத்தில், அவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இம்மாவட்டத்தில் ஹிந்துக்கள் சிறுபான்மையாக வசிக்கும் கிராமங்களில், கிராம நிர்வாகம் பெரும்பாலும் சர்ச் வழியாக நடக்கிறது.

சர்ச்சுகளில் மக்களை திரட்டி, பொது விவகாரங்களில் போராட்டம் நடத்துகின்றனர். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை, பாதிரியார்கள் தீர்மானிக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து, சர்ச் பாதிரியார்கள் பொதுமக்களை தவறாக வழி நடத்துகின்றனர். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202118:35:04 IST Report Abuse
oce பாதிரியை சிறையில் போட போப் அனுமதி வேண்டும்.பாதிரி சொல்ற கட்சிக்கு கும்பலா கூடி நின்னு ஓட்டுப்போட போப்பிடம் அனுமதி கேட்க வேண்டாமா.
Rate this:
Cancel
selvaraju - KUALA LUMPUR,மலேஷியா
31-ஜூலை-202115:26:47 IST Report Abuse
selvaraju ask him, what he did for Tamil Nadu Hindu peopl?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
31-ஜூலை-202114:57:12 IST Report Abuse
bal மக்களின் தவரான முடிவால் வெளிநாட்டு மற்றும் முகலாய கலாச்சாரம் பரவி மக்கள் குவாட்டர் பிரியாணி மற்றும் துட்டுக்கு நம் பாரம்பரியத்தை விற்று விட்டனர்..எட்டப்பனுக்கும் இப்போதுள்ள மக்களுக்கும் என்ன வித்தியாசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X