பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் 2வது எஸ்.ஐ.,யாக திருநங்கை

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை, போலீஸ் எஸ்.ஐ.,யாக தேர்வு பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல். இவரது மனைவி வளர். தம்பதியின் மகள் திருநங்கை சிவன்யா, 31; பி.காம். பட்டதாரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், செல்வவேல் இறந்தார். திருவண்ணாமலையில் தனியார் போலீஸ் பயிற்சி மையத்தில் சிவன்யா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை, போலீஸ் எஸ்.ஐ.,யாக தேர்வு பெற்றுள்ளார்.



latest tamil news



திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல். இவரது மனைவி வளர். தம்பதியின் மகள் திருநங்கை சிவன்யா, 31; பி.காம். பட்டதாரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், செல்வவேல் இறந்தார். திருவண்ணாமலையில் தனியார் போலீஸ் பயிற்சி மையத்தில் சிவன்யா படித்து வந்தார். தற்போது போலீஸ் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் கையால் கடந்த 26ம் தேதி பணியாணை பெற்றார்.


latest tamil news



இதுகுறித்து சிவன்யா கூறியதாவது: சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் அரசு பள்ளி, கல்லுாரிகளில் சிரமத்துக்கு இடையே படித்தேன். திருநங்கையான என்னை, குடும்பத்தினர் ஒதுக்கி வைக்காமல், அரவணைத்து வளர்த்தனர். போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது கனவு. தற்போது நிறைவேறியுள்ளது. குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி.,யாக வேண்டும். இது என் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



தமிழகத்தில் முதல் முறையாக, சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ.,யாக பொறுப்பேற்ற நிலையில், இரண்டாவதாக சிவன்யா எஸ்.ஐ.,யாக தேர்வாகி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KM Prabhu - SIVAKASI ,இந்தியா
31-ஜூலை-202115:57:23 IST Report Abuse
KM Prabhu வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-ஜூலை-202113:57:10 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள். அவர்களிடமும் திறமை இருக்கிறது. அதை அவர்கள் முதலில் உணரவேண்டும். பிறகு அவர்களை ஊக்குவிக்க மற்ற இனத்தவர், அதாவது ஆண், பெண் இனத்தவர் முயலவேண்டும். எல்லோரும் கடவுள் படைப்பு என்பதை எல்லோரும் அறியவேண்டும்.
Rate this:
Cancel
SIVAKUMAR - trichy,இந்தியா
31-ஜூலை-202112:45:42 IST Report Abuse
SIVAKUMAR முதலில் வாழ்த்துக்கள், இவர்கள் இருவரும் போல மற்ற திருநங்கைகள் வரவேண்டும் மற்றும் எவரும் மற்றவரிடம் கையோன்ற பழக்கத்தை விட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X