பார்லிமென்டை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க இத்தனை நிபந்தனைகளா...

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
பார்லிமென்டை சுமுகமாக நடத்த, எதிர்க்கட்சிகளை மத்திய அரசு திருப்திபடுத்த வேண்டும். 'பார்லிமென்டை முடக்குவது ஜனநாயக நடவடிக்கை தான்' என, பா.ஜ., தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் சொன்னதை திரும்ப பெற வேண்டும்; பெகாசஸ் உளவு குறித்து கூட்டு பார்லி குழு விசாரிக்க வேண்டும்.- தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன்'இதைத் தான், ஆளும் தரப்பு, 'பார்லிமென்ட்டை காங்.,
பார்லிமென்டை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க இத்தனை நிபந்தனைகளா...

பார்லிமென்டை சுமுகமாக நடத்த, எதிர்க்கட்சிகளை மத்திய அரசு திருப்திபடுத்த வேண்டும். 'பார்லிமென்டை முடக்குவது ஜனநாயக நடவடிக்கை தான்' என, பா.ஜ., தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் சொன்னதை திரும்ப பெற வேண்டும்; பெகாசஸ் உளவு குறித்து கூட்டு பார்லி குழு விசாரிக்க வேண்டும்.
- தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன்


'இதைத் தான், ஆளும் தரப்பு, 'பார்லிமென்ட்டை காங்., 'ஹைஜாக்' செய்கிறது' என்கின்றனர். பார்லிமென்டை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க, இத்தனை நிபந்தனைகளா...' என, ஆச்சர்யம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன் அறிக்கை.



பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க, மோடி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் மூலம், நம் அனைவரையும் இந்த அரசு ஒட்டு கேட்டது உறுதியாகியுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விரிவான நீதி விசாரணை தேவை.
- மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி


'உங்களை ஒட்டு கேட்டு, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது... உங்கள் செயல்பாடுகள் தான் அனைவரும் அறிந்ததாயிற்றே...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை.



பெகாசஸ் ஒட்டுகேட்பு குறித்து, நீதிமன்ற விசாரணை வேண்டும் என, பிற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, எம்.பி.,யான நானும் வலியுறுத்தினேன். நான் கூடுதலாக, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். ஏனெனில், கொரோனாவை விட பெகாசஸ் கொடியது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


latest tamil news




'தொகுதி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய பாடுபடுவீர்கள் என, எம்.பி.,யாக்கி அனுப்பி வைத்தால், போராட்டமா நடத்துகிறீர்கள் என, தொகுதி மக்கள் கோபப்பட போகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.



ஒவ்வொரு பா.ஜ.,வினரும் தேச விரோதிகளை களையெடுப்பது, தேசப்பற்றை ஊட்டுவது, மதமாற்றிகளை ஒழித்துக் கட்டுவது, ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது, திராவிட பொய்யையும், புனைவையும் தோலுரிப்பது போன்ற வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது உழைக்க வேண்டியது கட்டாயம்.
- தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி


'ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது தவிர்த்து, உங்களின் பிற விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி அறிக்கை.



பிஜி நாட்டின் மக்கள்தொகை, ஒன்பது லட்சம். எஸ்டோனியா என்றொரு நாட்டில், 13 லட்சம் மக்கள் தான் உள்ளனர். இந்த நாடுகள் எல்லாம் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளன. இந்திய நகரங்களை விட குறைவாக மக்கள்தொகை கொண்ட இந்த நாடுகளுக்கு கிடைக்கும் தங்கம் நமக்கு ஏன் கிடைக்க மாட்டேன் என்கிறது?
- அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்


'அந்த நாடுகளில், இளைஞர்கள் படிப்பு, விளையாட்டு என பக்குவமாக உள்ளனர். 'ஜிந்தாபாத்' கிடையாது; மொபைல் போனை நோண்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்; அரசியல் கட்சிகள் பின்னால் போக மாட்டார்கள்...' என, உண்மையை கூறத் தோன்றும் வகையில், அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
31-ஜூலை-202119:25:26 IST Report Abuse
DVRR பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக?ஒரு 300 பேருக்காக 139.4 கோடி மக்கள் வாழ்வு நாசமாகிப்போகின்றது இந்த நாடாளுமன்றம் நடை பெறாததால் ஆகவே அந்த 300 இந்தியாவில் பிறந்த இந்திய நல்வாழ்வு பணயம் வைப்பவர்களை நாடு கடத்தவேண்டும் உடனே அவர்கள் இந்திய சொத்தை அரசு கருவூலத்தில் சேர்த்த பின்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
31-ஜூலை-202116:23:55 IST Report Abuse
Sivagiri தமிழ்நாட்டில் ஜெ இறந்த பின் எடப்பாடி முதல்வராக இருக்கும் ஒவ்வொரு நாளும், பிரசாந்த் கிஷோர் கம்பெனியின் வழிகாட்டுதல்படி தீயமுக-வின் இடைவிடாத பொய் பிரச்சாரங்களாலும் நக்கல் கிண்டல் நையாண்டி பிரச்சாரங்களாலும் சில்லறைகளுடன் சேர்ந்து , நாள்தோறும் நடத்திய மீடியா போராட்டங்களால் , மக்களை வேறு சிந்தனை செய்ய விடாமல் அதிமுக-வை மக்கள் வெறுப்பது போலவும் தீமுகாவை மக்கள் விரும்புவது போலவும் பிரச்சார மாயையை ஏற்படுத்தி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தது போல , அடுத்த எம்பி எலெக்சன் வரை , இப்படி ஒவ்வொரு நாளும் , புது புது கோடாங்கி அடித்துக் கொண்டே இருப்பார்கள் - ஒவ்வொருநாளும் மோடி மீதான வெறுப்பு பிரச்சாரம் வந்து கொண்டே இருக்கும் , சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் ராகுல் & கோ - டுவிட் போட்டுக் கொண்டே இருப்பார் - அதற்கு மீடியாக்கள் பெரிய அளவில் விவாதங்கள் நடக்கும் - மோடி அரசு செய்யும் மாபெரும் சாதனைகள் கூட சிறிதாக , ஓரமாகக் கூட வராது (தினமலரில் கூட ) , இதற்கு சர்வதேச அளவில் கூட ஆதரவு இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படும் , இதுவே கிறிஸ்தவ மிஷனரிகளின் பிரச்சார யுக்தி . . இதை முறியடிக்க டில்லி மீடியாக்களை, மற்றும் புற்றேசல் போல பெருத்து விட்ட மாநில மீடியாக்களை கண்ட்ரோல் செய்தால்தான் முடியும் . . . இதெல்லாம் சரி செய்யாமல் விட்டால் , இல்லாவிட்டால் அடுத்த எலெக்சன் அபிமன்யு-வை துர்யோதனாதிகள் சுற்றி நின்று வீழ்த்தியது போல மிஷனரிகள் (நரிகள் ) வீழ்த்திவிடும் . .
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
31-ஜூலை-202114:30:19 IST Report Abuse
Suppan இந்த வேறு வேலை இல்லாத எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற அங்கத்தினர்கள் அவையை முடக்குவதையே குறியாக வைத்துள்ளார்கள். வரப்போகும் மசோதாக்களை படித்தார்களா இல்லையா? சந்தடி சாக்கில் பாஜக இந்த மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. பிறகு இவர்கள் ஓலமிடுவார்கள் பாருங்கள். விவாதங்கள் இல்லாமல் அரசு மசோதாக்களை சட்டமாக்கிவிட்டது என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X