பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' வழிகாட்டி - 2.0 துவங்கியது

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021
Share
Advertisement
பிளஸ் 2 நிறைவு செய்த மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த தகவல்களை அள்ளி தரும், இரண்டாம் கட்ட ஆன்லைன், 'வழிகாட்டி' நிகழ்ச்சி இன்றும்(ஜூலை 31) மற்றும் நாளையும் நடக்கிறது.இந்நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்குகிறது. 'தினமலர் மற்றும் கல்விமலர்' இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு,
தினமலர், கல்விமலர், வழிகாட்டி2.0

பிளஸ் 2 நிறைவு செய்த மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த தகவல்களை அள்ளி தரும், இரண்டாம் கட்ட ஆன்லைன், 'வழிகாட்டி' நிகழ்ச்சி இன்றும்(ஜூலை 31) மற்றும் நாளையும் நடக்கிறது.

இந்நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்குகிறது. 'தினமலர் மற்றும் கல்விமலர்' இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இலவசமாக பங்கேற்கின்றனர்.


பங்கேற்கும் நிபுணர்கள்:


கோர் இன்ஜினியரிங் படிப்புகள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ்,

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் குறித்து நிபுணர் முகமது யூசுப்,

தொழில்முனைவோருக்கு தேவையான திறன்கள் குறித்து, 'கிஷ்புளோ' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுரேஷ் சம்பந்தம்.

பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'கட்-ஆப்' குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி,


latest tamil news


கல்லூரியை தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம்,

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் வாய்ப்புகள் குறித்து, 'ஒர்க்போர்ஸ் மேனேஜ்மென்ட்' இயக்குநர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

காலை, 10:00 முதல் 12:00 மணிவரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, kalvimalar.com என்ற இணையதளத்தில், மாணவரது பெயர், வகுப்பு மற்றும் மொபைல் எண் போன்ற தகவல்களை அளித்து, உடனே பதிவு செய்து கொள்ளுங்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X