பொது செய்தி

தமிழ்நாடு

நேர்மை அதிகாரிகள் டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் ; ஹிந்து அறநிலையத்துறை கதிகலங்குது

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
திருநெல்வேலி: நேர்மையாக பணியாற்றிய இரண்டு அதிகாரிகளை இடமாற்றியும், சஸ்பெண்ட் செய்தும் ஹிந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முறைகேடாக சான்றிதழ் வழங்கியதற்காக ஐகோர்ட் கண்டித்த ஒரு அதிகாரியை மீண்டும் வள்ளியூரில் பணியமர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரி மாற்றம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலராக இருந்தவர்
நேர்மை அதிகாரிகள், டிரான்ஸ்பர், சஸ்பெண்ட், முறைகேடு அதிகாரி, முக்கியத்துவம், ஹிந்து அறநிலையத்துறை, கதிகலங்குது

திருநெல்வேலி: நேர்மையாக பணியாற்றிய இரண்டு அதிகாரிகளை இடமாற்றியும், சஸ்பெண்ட் செய்தும் ஹிந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முறைகேடாக சான்றிதழ் வழங்கியதற்காக ஐகோர்ட் கண்டித்த ஒரு அதிகாரியை மீண்டும் வள்ளியூரில் பணியமர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.


அதிகாரி மாற்றம்


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலராக இருந்தவர் சுபாஷினி. வள்ளியூர், திசையன்விளை பகுதியில் ஹிந்து அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் செயல்பட்ட தனியார் கனிம நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வந்தார்.


latest tamil news
இந்நிலையில் நேற்று முன்தினம் சுபாஷினி தென்காசி மாவட்டம் நவநீதகிருஷ்ணசாமி கோயிலுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக புதுக்கோட்டை கீரனுார் பகவதியம்மன் கோயிலில் பணியாற்றிய வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூலை 14ல் இடமாற்றம் கோரியதாகவும் உடனடியாக மாற்றப்படுவதாகவும் மாற்றல் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வேலுச்சாமி ஏற்கனவே 2009ல் வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பணியாற்றினார்.


கோர்ட் கண்டித்தவர் நியமனம்

அப்போது மீனாட்சியம்மாள் என்பவர் 1919ல் கோயிலுக்கு எழுதி வைத்த நிலத்தை அவரது தரப்பிடம் இருந்து ஜெபமணி என்ற கிறிஸ்தவர் வாங்கியிருந்தார். ஜெபமணியும், மகன் வேதசிங்கும் தங்களை கோயில் அக்தார் என அறிவிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''ஒரு கிறிஸ்தவர் ஹிந்து அறநிலையத்துறை கோயிலுக்கு அக்தார் ஆக முடியாது. ஆனால் அவர்கள் அக்தார் ஆகலாம் என கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி தடையின்மை சான்றிதழ் வழங்கியுள்ளார். கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியவர் தனது பதவிக்கு உகந்ததாக நடந்து கொள்ளவில்லை'' என தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

ஐகோர்ட் உத்தரவிற்கு பிறகு அந்த நிலம் மீட்கப்பட்டது. வேலுச்சாமி வடமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார். தற்போது தி.மு.க., ஆட்சி வந்ததும் விருப்ப மாறுதல் கேட்டு 10 நாட்களில் விரும்பிய இடத்திற்கு பொறுப்புக்கு வந்துள்ளார். நேர்மையான பெண் அதிகாரி சுபாஷினி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நேர்மை அதிகாரி சஸ்பெண்ட்


இதேபோல் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. திருச்செந்துாரில் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட கேரள லாட்ஜை தனியார் சிலர் வாடகைக்கு விட்டு சம்பாதித்தனர். பொதுநல வழக்கு மூலம் லாட்ஜை மீட்க கோர்ட் உத்தரவிட்டது. முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள லாட்ஜை கோயிலின் செயல்அலுவலர் அஜீத் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு மீட்டார். அதன் வருமானம் கோயிலுக்கு வருகிறது.


latest tamil newsஇந்நிலையில் நேற்று அஜீத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உயரதிகாரிகள், கட்சியினரின் சுயநலனுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் பந்தாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரங்கள் முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விகடகவி - திருநெல்வேலி,இந்தியா
31-ஜூலை-202122:24:06 IST Report Abuse
விகடகவி ஹாய்
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
31-ஜூலை-202121:59:25 IST Report Abuse
vivek c mani இதுதான் இவர்கள் தரும் நேர்மையான ஆட்சி. ஒரு பக்கம் கோவில் சொத்துக்களை , நிலங்களை மீட்பதாக தினம் தினம் அறிவிப்புக்கள். அதே சமயம் கிறிஸ்துவர்களுக்கு கோவில் நிலத்தை சட்டத்திற்கு புரம்பாக மாற்றம் செய்தவருக்கு சலுகை/ திருப்பி நியமனம் .. கோவில்கள் ஹிந்துக்களின் சொத்துக்கள் . அரசுடையதல்ல . அரசு சரியான நிர்வாகம் செய்ய வேண்டுமே தவிர ,நிர்வாக குளறுபடிகள் செய்து ஹிந்துக்களின் சொத்துக்களை அழிக்க கூடாது. ஹிந்துக்கள் தூங்கி கொண்டிருக்கவில்லை.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
31-ஜூலை-202120:33:59 IST Report Abuse
RaajaRaja Cholan மற்ற மத வழிபாடு தளங்களை பற்றி இவனுங்களை ஒரு வார்த்தை பேச சொல்லுங்க பார்ப்போம் . மயக்கம் போட்டு கீழ விழுந்து போய்டுவானுக , இங்க வேலை பாக்குறது பாதி பெரு மதம் மாற்றியும் , பெயர் மாற்றாமல் ஹிந்துக்களின் வழிபாட்டை நம்பாமல் ஆனான்ல் ஹிந்து பணத்தில் இரந்து உண்டு குடும்பத்தை வளர்கிறான் , சார்ந்த மதத்தின் மேல் நம்பிக்கை இல்லை போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X