காபூல்: மேற்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா., அலுவலகம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கி கொள்வதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தலிபான்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அமெரிக்க படைகள் வெளியேறுவது தள்ளி போனது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹெராட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை தலிபான்கள் தாக்கினர். இதில் ஆப்கானிஸ்தான் போலீஸ் காவலர் ஒருவர் உயிரிழந்தார்; சில அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர். இதனால் ஐ.நா., அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.நா., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் சில நாடுகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE