காஷ்மீரில் 14 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரெய்டு

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஸ்ரீநகர: காஷ்மீரில் 14 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜம்முவில் விமானப்படை தளத்தில் நடந்த டுரோன் தாக்குதல் மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக லஷ்கர் இ முஸ்தபா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டது தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது.ஜம்முவின் சுஞ்சுவான், காஷ்மீரின் சோபியான், ஆனந்த்நாக், பனிஹால் பகுதிகளில் 14
jammu, NIA, Raid, terror, attack, airbase,

ஸ்ரீநகர: காஷ்மீரில் 14 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜம்முவில் விமானப்படை தளத்தில் நடந்த டுரோன் தாக்குதல் மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக லஷ்கர் இ முஸ்தபா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டது தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது.

ஜம்முவின் சுஞ்சுவான், காஷ்மீரின் சோபியான், ஆனந்த்நாக், பனிஹால் பகுதிகளில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி அதிகாலை 2 மணியளவில் டுரோன் மூலம், ஜம்மு விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 2 பேர் காயமடைந்தனர். இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த சில நாட்களில், காஷ்மீருக்குள் 6 டுரோன்கள் தென்பட்டன. இதனை இந்திய பாதுகாப்பு படையினர் விரட்டி அடித்தனர்.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவும், ஜம்முவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக லஷ்கர் இ முஸ்தபா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அந்த அமைப்பின் தலைவன் ஹிதாயத்துல்லா என்பவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 27 ம் தேதி ஜம்முவின் நர்வால் பகுதியில் 5 கிலோ ஐஇடி வெடிமருந்துகளுடன் நதீம் அயுப் ரதார் மற்றும் தலிப் உர் ரெஹ்மான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


இந்த விவகாரங்கள் தொடர்பாக சோதனை நடந்து வருவதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LakshmiNarasimhan KS - Chennai,இந்தியா
31-ஜூலை-202114:39:17 IST Report Abuse
LakshmiNarasimhan KS When are they going to conduct in TAMILNADU
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
31-ஜூலை-202113:27:20 IST Report Abuse
sankaseshan Attack POK and cut their supply lines to terrorists .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
31-ஜூலை-202113:22:27 IST Report Abuse
sankaseshan POK should be attacked. Till then Pakistanis will not be quiet. Their back bone should be broken by cutting supply lines .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X