பஞ்சாப் எல்லையில் 2 பாக்., ஊடுருவல்காரர்கள் சுட்டுக்கொலை| Dinamalar

பஞ்சாப் எல்லையில் 2 பாக்., ஊடுருவல்காரர்கள் சுட்டுக்கொலை

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (3)
Share
சண்டிகர்: பஞ்சாபில் சர்வதேச எல்லைப்பகுதி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு ஊடுருவல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பஞ்சாபின் டார்ன் டாரன் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. இதனை கண்டறிந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை திரும்பி செல்லும்படி
பஞ்சாப், பாகிஸ்தான், எல்லை, ஊடுருவல்காரர்கள், சுட்டுக்கொலை, காஷ்மீர், பயங்கரவாதிகள்

சண்டிகர்: பஞ்சாபில் சர்வதேச எல்லைப்பகுதி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு ஊடுருவல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பஞ்சாபின் டார்ன் டாரன் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. இதனை கண்டறிந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். இருப்பினும் அவர்கள் கண்டுகொள்ளாமல், ஊடுருவ முயன்றனர். இதனையடுத்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ஊடுருவல்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.


latest tamil news





காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், புல்வாமா மாவட்டத்தில் நக்பெரன் - தர்சர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X