வட்டு எறிதலில் பைனலுக்கு முன்னேறினார் கமல்பிரீத் கவுர்| Dinamalar

வட்டு எறிதலில் பைனலுக்கு முன்னேறினார் கமல்பிரீத் கவுர்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (8)
Share
டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் பைனலுக்கு இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் முன்னேறினார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் நடக்கிறது. இதில் பெண்களுக்கான வட்டு எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் சீமா புனியா, கமல்பிரீத் கவுர் பங்கேற்றனர். மொத்தம் 31 வீராங்கனைகள், இரு பிரிவுகளாக விளையாடினர். ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 3 வாய்ப்பு வழங்கப்படும். 'பி'
வட்டு எறிதல், பைனல், கமல்பிரீத் கவுர்

டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் பைனலுக்கு இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் முன்னேறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் நடக்கிறது. இதில் பெண்களுக்கான வட்டு எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் சீமா புனியா, கமல்பிரீத் கவுர் பங்கேற்றனர். மொத்தம் 31 வீராங்கனைகள், இரு பிரிவுகளாக விளையாடினர். ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 3 வாய்ப்பு வழங்கப்படும். 'பி' பிரிவில் இடம் பிடித்திருந்த கமல்பிரீத் கவுர், முதல் வாய்ப்பில் 60.29 மீ., துாரம் எறிந்தார். பின் எழுச்சி கண்ட இவர், 2வது வாய்ப்பில் 63.97 மீ., துாரம் எறிந்தார். தொடர்ந்து அசத்திய இவர், 3வது வாய்ப்பில் அதிகபட்சமாக 64.00 மீ., துாரம் எறிந்து, 'பி' பிரிவில் 2வது இடத்தை கைப்பற்றினார்.


latest tamil news



நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் குரோஷியாவின் சான்ட்ரா பெர்கோவிச் (3வது இடம், 63.75 மீ.,), நடப்பு உலக சாம்பியன் கியூபாவின் யைம் பெரஸ் (7வது இடம், 63.18 மீ.,) ஆகியோரை பின்தள்ளிய கமல்பிரீத் கவுர், ஒட்டுமொத்தமாக 2வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார். சமீபத்தில் நடந்த பெடரேஷன் கோப்பை (65.06 மீ.,), இந்திய கிராண்ட் பிரிக்ஸ்-4 (66.59 மீ.,) போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, உலக தரவரிசையில் 6வது இடம் பிடித்த பஞ்சாப் வீராங்கனை கமல்பிரீத் கவுர் 25, பைனலில் (ஆகஸ்ட் 2) அசத்தும் பட்சத்தில் ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைக்கலாம்.


சீமா ஏமாற்றம்


'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்த மற்றொரு இந்திய வீராங்கனை சீமா புனியா 38, முதல் வாய்ப்பை 'பவுல்' செய்து வீணடித்தார். அடுத்த இரு வாய்ப்புகளில் 60.57, 58.93 மீ., துாரம் எறிந்தார். 'ஏ' பிரிவில் 6வது இடம் பிடித்த ஹரியானா வீராங்கனை சீமா, ஒட்டுமொத்தமாக 13வது இடத்து பைனல் வாய்ப்பை இழந்தார். 'டாப்-12' இடம் பிடித்தவர்கள் மட்டுமே பைனலுக்கு தகுதி பெற முடியும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X