பொது செய்தி

இந்தியா

திறமையான போலீஸ்துறையை உருவாக்குங்கள்: இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: நவீன, திறமையான போலீஸ்துறையை உருவாக்கும் பொறுப்பு இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி பெறும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.ஆன்லைன் முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர்
Police, PM Modi, narendra modi, போலீஸ், பிரதமர், நரேந்திர மோடி, மோடி

புதுடில்லி: நவீன, திறமையான போலீஸ்துறையை உருவாக்கும் பொறுப்பு இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி பெறும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

ஆன்லைன் முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தேசத்தின் நலனை மனதில் வைத்து எடுக்க வேண்டும். நாடே முதன்மை, எப்போதும் முதன்மை என்பதன் அடிப்படையில் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை(என்டிஆர்எப்) மீது அனைவருக்கும் நம்பிக்கை வருகிறது. என்டிஆர்எப் வந்தால், காப்பாற்றப்படுவோம் என மக்கள் நம்புகின்றனர். அந்த அமைப்பிலும் நிறைய போலீசார் உள்ளனர். ஆனால், அந்த அமைப்பு ஏற்படுத்திய நம்பிக்கையை போலீசார் ஏன் ஏற்படுத்தவில்லை?

ஆனால், கொரோனா காலத்தில் இந்த எண்ணம், போலீசாரின் பணிகள் மூலம் மாறியுள்ளது. இருப்பினும், போலீஸ் மீதான பொது மக்களின் நம்பிக்கையை ஏன் அதிகரிக்கவில்லை? நாட்டின் பாதுகாப்பிற்காக நீங்களும் உங்களின் வாழ்க்கையை தியாகம் செய்கிறீர்கள். போலீஸ் குறித்து பேசும்போது, மக்களின் எண்ணம் கடினமாக உணர்கின்றனர். இதனை மாற்ற வேண்டும். நீங்கள் அமைப்பை மாற்றுவதும், அமைப்பு உங்களை மாற்றுவதும், உங்களின் பயிற்சி, எண்ணம், நன்னடத்தையை பொறுத்தது. உங்களின் இலக்கு என்ன? உங்களின் கொள்கை என்ன? இவை அனைத்தும், உங்களின் நடவடிக்கை மூலம் வரையறுக்கப்படும்.


latest tamil news



வளர்ச்சி குறித்த பாதையில் ஒரு நாடு பயணிக்கும் போது, உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் சவால்கள் வரும். போலீசை சிறப்பானதாக மாற்ற அந்த சவால்கள் உதவும். நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, குறிப்பாக சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றங்களை தடுப்பது உங்கள் முன் உள்ள சவால்கள்.
நல்லாட்சிக்காக மக்கள் போராடி வருகின்றனர். நல்ல நிர்வாகத்திற்காக உங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும். சுதந்திர போராட்டத்தின் போது, நாட்டிற்காக மக்கள் உயிர் தியாகம் செய்தனர். இன்று நாட்டிற்காக நீங்கள் வாழ வேண்டும். கடந்த காலங்களில் போலீசில், பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டது. நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன், பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், போலீஸ் படை மீதான மரியாதை மற்றும் மதிப்பு வலுப்படும்.

பெருமைமிக்க மற்றும் கட்டுப்பாடு கொண்ட இந்தியாவை அமைப்பதற்கான அடித்தளத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். இதனை செய்வதற்கான நேரம் உங்களை தேர்வு செய்துள்ளது. நவீன, திறமையான போலீஸ்துறையை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
31-ஜூலை-202123:29:37 IST Report Abuse
Appan பிஜேபி ஆட்சியில் இது சாத்தியம் இல்லை..பிஜேபி CBI ஐ கைவசம் கொண்டுவந்து விட்டது..இப்போ சிபிஐ யில்[பிரச்சினை செய்த ஆஸ்த்தான ஒய்வு பெறும்போது பதவி நீட்டிப்பு தந்து டேலி பொலிசிஸ் சிஎப் ஆக நியமிக்க பட்டுஉள்ளர்..இந்திய சரித்திரத்தில் இப்படி நடந்தது இல்லை இதை செய்து விட்டு மோடி இப்படிப்பேசலாமா..? இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா../ மோடி இந்த 7 வருடத்தில் ஒரு தடவைக்கு குட Press மீட்டிங் கொடுத்தது இல்லை.மக்களாட்சியில் press meeting ஒரு முக்கிய அங்கம் இதை மதிக்கத்த மோடி எப்படி இந்தியாவில் ஜனநாயகத்தை நிலை நாட்டுப்=வார்..சொல்லுக்கும் சுர்யாளுக்கு வித்தியாசம் இருந்தால் நாடு இருக்காது..
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
31-ஜூலை-202123:20:42 IST Report Abuse
Rajas /////நல்லாட்சிக்காக மக்கள் போராடி வருகின்றனர்.////// நீங்கள் இந்தியாவை நினைத்து பேசியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் உங்கள் கட்சியினரோ பிரதமர் ஆப்ரிக்காவை நினைத்து கவலை படுகிறார் என்று ரவுண்டு கட்டுவார்களே. சப்போர்டுக்கு மார்னிங் கன்சல்ட் பத்திரிகை வேறு இருக்கிறது.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
31-ஜூலை-202123:09:24 IST Report Abuse
Rajas அதிகாரம் இல்லாத ஜனாதிபதி, கவர்னர்கள் தான் எதாவது நிகழ்ச்சியில் கலந்து இதை போல இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று யாருக்காவது அறிவுரை சொல்லி கொண்டிருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X