எத்தியோப்பியாவில் உணவு பஞ்சம்; ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெனிவா: 'எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்' என, ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஐ.நா., வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில்,

ஜெனிவா: 'எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்' என, ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது.



latest tamil news



இதுகுறித்து ஐ.நா., வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில், சுமார் 4 லட்சம் மக்கள் பஞ்சத்தில் வாழ்கின்றனர். மேலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அவசர உணவுத் தேவையில் உள்ளனர்.


latest tamil news



இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. டைக்ரேவில் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பரிசோதனை செய்ததில் இருவரில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவது தெரியவந்தது. அடுத்த 12 மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



'எத்தியோப்பியாவுக்கு அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டாக நிலவிவந்த ராணுவ ரீதியிலான சிக்கலை, சமாதான ஒப்பந்தத்தின் மூலம் எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலி முடிவுக்கு கொண்டுவந்தார். இதற்காக அவருக்கு 2019ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக டைக்ரே பகுதியில் உள்ள இனக்குழுக்களிடம் மோதல் நிலவுகிறது. இது அம்மக்களை மேலும் ஏழ்மையில் தள்ளக்கூடும். சொந்த நாட்டில் நிலவும் இனக்குழு பிரச்சனையை அபய் அகமதுவால் முடிவுக்குக் கொண்டுவர முடியாதா' என, மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
31-ஜூலை-202122:21:54 IST Report Abuse
vivek c mani எத்தியோப்பியாவில் 60 % மேல் கிறிஸ்துவர்கள். அதாவது 40% மேல் ஓர்தொடோக்ஸ் கிறிஸ்துவர்கள் , 20 % பிராட்டஸ்டன்ட் .இந்தியாவில் ஹிந்துக்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு பள்ளிகளிலும் , ஆஸ்பத்திரிகளில் மற்றும் வீடு வீடாக சென்று மதம் மாற்றுவதை விட்டு எத்தியோப்பியா மக்களுக்கு உதவலாமே. அங்கு சேவை செய்யலாமே. ஆஸ்பத்திரிகள் நிறுவலாம் . பள்ளிக்கூடங்கள் கட்டலாம். அங்கு கிறிஸ்துவர்கள் தானே பெரும்பான்மை. பெரும்பான்மை பெற்றாலும் வறுமை பிடித்த நாட்டில் சுரண்டல்களுக்கு வழியில்லை போலும்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
31-ஜூலை-202117:13:35 IST Report Abuse
Nagarajan D ஊட்டச்சத்து மட்டுமா குறைவு உணவுக்கே பஞ்சம் பிறகு என்ன சொல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X