பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் பாஸ்: முதல்வர் அறிவிப்பு

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: பிளஸ் 2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாக அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், மதிப்பீட்டு முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்கு அளித்ததை போல், ஆக.,2021 மாதம்
மாணவர்கள், தேர்ச்சி, தமிழக அரசு

சென்னை: பிளஸ் 2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாக அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், மதிப்பீட்டு முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்கு அளித்ததை போல், ஆக.,2021 மாதம் நடக்கும் பிளஸ் 2 வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டப்பிரிவின் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவராக அறிவித்து முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.


latest tamil news



அவர்கள், அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய உத்தரவுகள் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும்.தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் தேர்வினை எழுதலாம். தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாகத் தங்களை அறிவிக்குமாறு கோரக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜூலை-202122:19:45 IST Report Abuse
அப்புசாமி ஆல் பாஸ் போட்டு என்ன பிரயோஜனம்? பெரியவர் வருஷத்துக்கு ரண்டு கோடி பேருக்கு வேலை குடுத்து அசத்துற மாதிரி நீங்களும் ஆல் மாற்றுத்திறனாளி வேலைத் திட்டம் கொண்டுவாங்க.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
31-ஜூலை-202120:04:36 IST Report Abuse
vbs manian பேசாமல் சில வருஷங்களுக்கு தீர்வையே ரத்து செய்து விடலாம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
31-ஜூலை-202118:21:27 IST Report Abuse
Vena Suna நம் திமு கழக உறுப்பினர் குழந்தைகளுக்கும் அந்த சலுகை வேண்டும்.. இல்லையேல் ஓட்டு கிடையாது உள்ளாட்சி தேர்தலில்.
Rate this:
விசு பாய் , சென்னைஆமாம். எட்டாங் கிளாஸ் மாணவனை 12ம்கிளாஸ் பாஸ் செய்ததாக அறிவிக்க வேண்டும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X