புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான பாபுலால் சுப்ரியோ அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக இருந்த பா.ஜ., எம்.பி., பாபுல் சுப்ரியோ சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது , மே.வங்க மாநிலம் அசன்சோல் தொகுதி எம்.பி.,யாக இருந்து வரும் அவர், தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ‛‛குட் பை. நான் எந்த அரசியல் கட்சிக்கும் செல்லவில்லை. திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எந்த கட்சிகளும் என்னை அழைக்கவில்லை. நான் எங்கும் செல்லவில்லை. சமூக பணியில் ஈடுபடுவதற்கு ஒருவர் அரசியலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசு ஒதுக்கிய வீட்டில் இருந்து ஒரு மாதத்திற்குள் காலி செய்துவிடுவேன். எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்வேன்''. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.