பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் முக்கிய கோயில்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை : ஆடி மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய கோயில்களில் வரும் 9 ம் தேதி வரையில் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா தொற்று வரும் 9 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன்

சென்னை : ஆடி மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய கோயில்களில் வரும் 9 ம் தேதி வரையில் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா தொற்று வரும் 9 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து சென்னையில் இன்று (31ம் தேதி )முதல் வரும் 9-ம் தேதி வரையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் என குறிப்பிட்ட ஒன்பது இடங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து சென்னை மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகம் 3-வது கோவிட் அலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,மதுரை மீனாட்சி அம்மன்கோவில்,அழகர்கோவில், பழமுதிர்சோலை, ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வரும் 2 ம் தேதி முதல் 9 ம் தேதி வரையில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம்உத்தரவு பிறப்பித்துள்ளது.


latest tamil news

சென்னை கோவில்கள்


ஆடி மாதத்தை முன்னிட்டு, சென்னையில் வட பழனி முருகன் கோயில், கந்தகோட்டம் கந்தசாமி கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம்மன் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தவும், மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் ஆகமவிதிபடி, கால பக்தர்கள் இன்றி கால பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
31-ஜூலை-202123:51:27 IST Report Abuse
Raj மனைவியை வைத்து நாடகம் ஆடியவர்
Rate this:
Cancel
31-ஜூலை-202123:46:40 IST Report Abuse
அருண், சென்னை this month is an auspicious month only for hindus... therefore ban implemented... ஆடி மாதம் தொடங்கி...கார்த்திகை வரை ஹிந்து மக்களுக்கு விழா காலங்கள்..இதை முடக்கவே இந்த தடை மற்றும் கடை அடைப்பு.. கோவிலுக்கு சென்றாலும் தேங்காய் உடைக்கக் கூடாதாம்....நம்முடைய கலாச்சாரத்தை அழிக்க வந்த தீக, மற்றும் தீமுகாவின் சூழ்ச்சியே வேறொன்றும் இல்லை...இந்துக்களின் வயிற்று எரிச்சல் இவர்களை சும்மா விடாது...ஒரு நாள் இதற்கு எல்லாம் பதில் சொல்லும் காலம் இயற்கை உருவாக்கும்...
Rate this:
Cancel
Kannan rajagopalan - Chennai,இந்தியா
31-ஜூலை-202122:01:30 IST Report Abuse
Kannan rajagopalan பக்ரீத் முடிந்தது அடுத்து க்ரிட்மாஸ் டிசம்பர் தான். அது வரையில் எல்லா இந்து பண்டிகைகளையும் தடை. பிச்சை வாங்கினதுக்கு விசுவாசம் வேண்டாமா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X