பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,986 பேருக்கு கோவிட்: 2,178 பேர் நலம்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,986 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,178 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 60,897 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,986 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,986 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,178 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 60,897 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,986 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,59,597 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,74,46,148 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,103 பேர் ஆண்கள், 883 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,95,354 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,64,205 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,178 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,04,805 ஆக உயர்ந்துள்ளது.

26 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 19 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,076 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Umashankar Jay - chennia,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-202123:04:13 IST Report Abuse
Umashankar Jay டாஸ்மாக் தவிர்த்து அனைத்து கடைகளையும் மூடுங்கள் .. கிறித்துவ இஸ்லாமிய வழிபாட்டு தளங்களை தவிர்த்து இந்து வழிபாட்டு தளங்களை மூடுங்கள் . தி மு க ஆட்சிக்கு வந்ததும் தமிழ் நாட்டில் கொரோனாவை ஒழித்துவிட்டார்கள் . இப்போது மக்களிடம் அதன் பெயரை கெடுக்க ... அரசு கொரோனவை தமிழ் நாட்டில் மறுபடியும் பரப்புகிறது . இதை எதிர்த்து உதயநிதியின் தலமையில் ... அரசை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் . தமிழ் மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக திரண்டு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-ஜூலை-202119:57:03 IST Report Abuse
Ramesh Sargam தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மேலும் பல மாநிலங்களில் இந்த கொடிய கொரானா தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. காரணம், அரசு அறிவித்த தளர்வுகளை மக்கள் ஏதோ வெட்டியாக சுத்த அனுமதித்ததுபோல் நடந்துகொண்டு மீண்டும் கொரானா தாக்குதலுக்கு வழிவகுத்துக்கொண்டனர். முதலில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையென்றால், விளைவுகள் மிகவும் பயங்கரம்.
Rate this:
31-ஜூலை-202121:44:23 IST Report Abuse
Saikumar C Krishnaசார், இன்னும் எத்தனை முறைதான் அறிவுறுத்துவது. இந்நாட்டு மக்கள் நாங்கள் முட்டாளாகதான் இருப்போம் என்று தீர்மானித்து விட்டால் ஒன்றும் செய்வதற்கில்லை சார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X