பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் அங்க பிரதட்சணம் செய்ய தடை: கலெக்டர் உத்தரவு

Added : ஜூலை 31, 2021
Share
Advertisement
வேலுார்:கோவில்களில், அங்க பிரதட்சணம் செய்ய தடை விதிக்கு வேலுார் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள போதிலும், ஆடி மாதம் தொடங்கி உள்ள நிலையில், பக்தர்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய தடையில்லை.வேலுார் மாவட்டத்தில் உள்ள கோவில்

வேலுார்:கோவில்களில், அங்க பிரதட்சணம் செய்ய தடை விதிக்கு வேலுார் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள போதிலும், ஆடி மாதம் தொடங்கி உள்ள நிலையில், பக்தர்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய தடையில்லை.வேலுார் மாவட்டத்தில் உள்ள கோவில் வளாகத்தில் பூ, தேங்காய், பழம் விற்பனை செய்யவும், கோவிலுக்குள் காவடி எடுத்து வரவும், பொங்கல் வைப்பது, கூழ்வார்த்தல், அலகு குத்துவது, அங்க பிரதட்சனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் வெளிப்புறங்களில் மட்டும் உணவு பொட்டலங்கள் வழங்கலாம்.
உள்ளே பிரசாதத்தை உட்கார்ந்து சாப்பிடவும், இசை கச்சேரி, ஆடல் நிகழ்ச்சி, பஜனை, நாடகம் நடத்தவும், குளங்களில் இறங்கி குளிப்பதற்கும், தெப்பத்திருவிழா நடத்தவும் அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X