பொது செய்தி

இந்தியா

சுரங்க நடைபாதைகளில் 'கேமரா': பெங்களூரு மாநகராட்சி திட்டம்

Added : ஜூலை 31, 2021
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு சுரங்க நடைபாதைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.பெங்களூரு மாநகரில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து அளிப்பதற்கு, பரபரப்பான சாலைகளில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை, சமூக விரோத செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பில்லாத

பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு சுரங்க நடைபாதைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு மாநகரில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து அளிப்பதற்கு, பரபரப்பான சாலைகளில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை, சமூக விரோத செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பில்லாத சூழலில், பாதசாரிகள் நடந்து செல்லவும் அச்சப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பாதுகாப்பில்லாமல் இருப்பதும்; சரியான வெளிச்சம் இல்லாததாலும் சுரங்க நடைபாதையை பலரும் பயன்படுத்தாமல் உள்ளனர். இங்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சுரங்க நடைபாதைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கும், அதற்கான பதிவுகளை அருகிலுள்ள போலீஸ் நிலையத்துடன் இணைப்பதற்கும் திட்டமிட்டு வருகிறது.
இத்திட்டத்துக்கு 50 லட்சம் ரூபாய் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில், சில சுரங்க நடைபாதைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கேமராவுடன், அசம்பாதவிதங்களை தடுப்பதற்கான 'பேனிக் பட்டன்' பொருத்தப்படும். இந்த பட்டனை அழுத்தினால், கேமரா இணைக்கப்பட்டுள்ள போலீஸ் நிலையம், மாநகராட்சி மையத்துக்கும் அபாய சத்தம் சென்று விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X