கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூலை 31, 2021
Share
Advertisement
பெங்களூரு: ‛‛கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் பெறப்பட்டது தொடர்பாக குறைதீர் கூட்டம் நடத்த, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா முதல் அலையின்போது, தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாநில அரசு கட்டண நிர்ணையம் செய்தது. இதற்கான

பெங்களூரு: ‛‛கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் பெறப்பட்டது தொடர்பாக குறைதீர் கூட்டம் நடத்த, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா முதல் அலையின்போது, தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாநில அரசு கட்டண நிர்ணையம் செய்தது. இதற்கான அறிவிப்பையும், வெளியிட்டு, தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதற்கு முதல் அலையின்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், இரண்டாம் அலையில் மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. அரசு மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் வேறுவழியின்றி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தங்கள் சிகிச்சைக்காக வீடு, நிலம், ஆபரணங்களை விற்று கட்டணம் செலுத்தியோர் பலர் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை, முதன்மை நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையிலான அமர்வில் நடந்தது.
விசாரணைக்கு பின் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:
சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு ஒதுக்கீடுக்கான படுக்கைகளுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு குறைதீர் கூட்டம் நடத்தி விசாரிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பெறப்பட்டதை, நோயாளிகளுக்குத் திரும்ப பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X