இளம் தொழிலதிபர் கொலை: பங்குதாரர் தலைமறைவு| Dinamalar

இளம் தொழிலதிபர் கொலை: பங்குதாரர் தலைமறைவு

Added : ஜூலை 31, 2021
Share
உடுப்பி: பணம் விஷயமாக, இளம் தொழிலதிபர் ஒருவரை, கொலை செய்த சம்பவம், குந்தாபுரா நகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உடுப்பி குந்தாபுரா காளாவராவில் வசித்தவர் அஜேந்திர ஷெட்டி, 33. இவர், ஐந்து ஆண்டுகளாக, அனுப் என்பவருடன், பங்குதாரராக சேர்ந்து, 'ட்ரீம் பைனான்ஸ்' என்ற பெயரில், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். திருமணமாகாத அஜேந்திரா, சமூக ஆர்வலராகவும் இருந்தார்.சம்பவத்தன்று இரவு

உடுப்பி: பணம் விஷயமாக, இளம் தொழிலதிபர் ஒருவரை, கொலை செய்த சம்பவம், குந்தாபுரா நகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடுப்பி குந்தாபுரா காளாவராவில் வசித்தவர் அஜேந்திர ஷெட்டி, 33. இவர், ஐந்து ஆண்டுகளாக, அனுப் என்பவருடன், பங்குதாரராக சேர்ந்து, 'ட்ரீம் பைனான்ஸ்' என்ற பெயரில், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். திருமணமாகாத அஜேந்திரா, சமூக ஆர்வலராகவும் இருந்தார்.
சம்பவத்தன்று இரவு 11:00 மணியாகியும், இவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது குடும்பத்தினர், மொபைலில் தொடர்பு கொண்டும், அவர் எடுக்கவில்லை. இதனால் பீதியடைந்த குடும்பத்தினர், அலுவலகத்துக்குச் சென்று பார்த்த போது, அஜேந்திரா, ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் சென்றனர். அஜேந்திராவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அஜேந்திரா உடலில் காயங்கள் உள்ளது. அவரது கொலையில், தொழில் பங்குதாரர் அனுப் கைவரிசை உள்ளது. தொழில் தொடர்பான, சில விஷயங்களுக்கு, அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அஜேந்திரா கழுத்திலிருந்த தங்கச்செயினை காணவில்லை. அவர் சமீபத்தில் வாங்கிய, புதிய காரையும் அனுப் கொண்டு சென்றுள்ளார். இவரே அஜேந்திராவை கொலை செய்திருக்கலாம் என, குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணை நடத்திய போது, அஜேந்திரா அலுவலகம் அருகிலுள்ள கடை உரிமையாளர், 'இரவு 8:30 மணி வரை, அனுப், அஜேந்திரா இருவரும், அலுவலகத்திலேயே இருந்தனர்' என, கூறியுள்ளார். எனவே அனுப்பை போலீசார், தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தை உடுப்பி மாவட்ட போலீஸ் எஸ்.பி., விஷ்ணுவர்த்தன், நேரில் பார்வையிட்டார். குந்தாபுரா ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X