ராகுலின் டிராக்டர் நாடகம் பலன் அளிக்குமா? விவசாயிகளை கவர திட்டம்

Updated : ஆக 02, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
விவசாய சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பார்லிமென்டுக்கு டிராக்டரில் வந்தது தற்போது பேசுபொருளாகி உள்ளது. இது போன்ற, 'நாடகங்கள்' உண்மையில் பலன் தருமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சில விவசாய சங்கங்கள், டில்லி எல்லையில்
ராகுல், டிராக்டர் நாடகம், பலன் அளிக்குமா, விவசாயிகள்

விவசாய சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பார்லிமென்டுக்கு டிராக்டரில் வந்தது தற்போது பேசுபொருளாகி உள்ளது. இது போன்ற, 'நாடகங்கள்' உண்மையில் பலன் தருமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சில விவசாய சங்கங்கள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் பார்லி.,க்கு டிராக்டரில் வந்தார் ராகுல். அவருடன் கட்சி எம்.பி.,க்கள் பிரதாப் சிங் பஜ்வா, ரன்வீத் சிங் பிட்டு, திபெந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோரும் வந்தனர்.


விளம்பர அரசியல்

அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக 'பேனர்'கள் வைத்திருந்தனர்; விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.ராகுலின் இந்த டிராக்டர் பேரணியை, 'நாடகம், விளம்பர அரசியல்' என, மத்தியில் ஆளும் பா.ஜ., கூறியுள்ளது.இது போன்ற நாடகங்களை பார்லி., பல முறை பார்த்துள்ளது.

ஆந்திர விவசாயிகளின் பிரச்னை குறித்து வெளிப்படுத்த, 2003ல் காங்.,கைச் சேர்ந்த ரேணுகா சவுத்ரி, பார்லி.,க்கு டிராக்டரில் வந்தார். ஆனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.கடந்த 1973ல் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, பாரதிய ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய், மாட்டு வண்டியில் பார்லி.,க்கு வந்தார்.டிராக்டர், மாட்டு வண்டியைத் தவிர எம்.பி.,க்கள் அதிகம் விரும்புவது சைக்கிள் தான். இந்த வாகனங்கள், சாதாரண மற்றும் விவசாய மக்களுடன் நேரடி தொடர்புடையவை.


புதிய வழி


அரசுக்கு எதிரான தங்கள் கருத்தை பதிவு செய்ய, இது போன்ற வாகனங்களில் வருவதை எம்.பி.,க்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

பார்லி., விவகாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால், அடிக்கடி சைக்கிளில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2016ல் அமைச்சராக பதவியேற்க, ஜனாதிபதி மாளிகைக்கு அவர் சைக்கிளில் வந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான 19ம் தேதி, டெரக் ஓ பிரையன் உள்ளிட்ட ஆறு திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் சைக்கிளில் வந்தனர். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.தாங்கள் சொல்ல வரும் பிரச்னைகளை வித்தியாசமான முறையில் சொல்வதற்கு, இது போன்ற யுக்திகளை எம்.பி.,க்கள் பின்பற்றுகின்றனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, தெலுங்குதேசத்தின் நரமல்லி சிவபிரசாத், புதிய வழியில் கோரிக்கை வைத்தார்.டாக்டரான அவர், பார்லி.,க்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேஷத்தில் வந்தார். ஹிந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர் வேடத்துடன், எம்.ஜி.ஆர்., ராமா ராவ் வேடத்திலும் வந்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார். இது போன்ற செயல்கள் அரசின் கவனத்தை ஈர்க்கிறதோ, இல்லையோ; பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு செய்தியாகின்றன. மக்களின் கவனத்தை ஈர்க்கவும், உங்களுக்காக குரல் கொடுக்கிறேன் என வாக்காளர்களுக்கு தெரிவிக்கவும், அரசியல்வாதிகள் இது போன்ற நாடகங்களை நடத்துகின்றனர்.


போராட்டம்

இது போன்ற நாடகங்கள் உண்மையில் ஓட்டுகளாக மாறுகிறதா என்பது தெரியவில்லை. விவசாய சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகளே போராடி வருகின்றனர். அடுத்தாண்டு துவக்கத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பஞ்சாப் விவசாயிகளின் ஓட்டுகளை கவருவதற்கு, ராகுலின் இந்த டிராக்டர் பயணம் உதவும் என காங்., நினைக்கிறது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X