பாதிரியார் பேச்சும், அவிழாத முடிச்சுகளும்!

Updated : ஆக 02, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (38) | |
Advertisement
'நாங்கள் பொய் சொல்லவில்லை; ஆனால் உண்மையை மறைத்து விட்டோம்' என்பது திராவிட கட்சிகளுக்கு புதிதல்ல. அந்நோய், தற்போது ஊடகங்களுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் தேவாலயம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.இதை கண்டித்து, அந்த மாவட்டத்தின் அருமனை என்ற இடத்தில், கடந்த
 பாதிரியார் ,பேச்சும், அவிழாத, முடிச்சுகளும்!

'நாங்கள் பொய் சொல்லவில்லை; ஆனால் உண்மையை மறைத்து விட்டோம்' என்பது திராவிட கட்சிகளுக்கு புதிதல்ல. அந்நோய், தற்போது ஊடகங்களுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் தேவாலயம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.இதை கண்டித்து, அந்த மாவட்டத்தின் அருமனை என்ற இடத்தில், கடந்த 18-ல் இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் இணைந்து, 'சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம்' என்ற பெயரில் கூட்டம் நடத்தின.


உரிமை உண்டு

ஜனநாயக நாட்டில் இது போன்ற போராட்டங்களுக்கு அனுமதி உள்ளது. ஆனால் பேச்சுரிமை என்ற பெயரில், என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைப்பது முட்டாள் தனமானது.வரைமுறையற்று பேசினால், அது தேச விரோத செயலை ஆதரிப்பதாக, மதக் கலவரத்தை துாண்டுவதாக கருதப்படும். ஒருவரின் பேச்சு அந்த வகையில் அமைந்தால், அது கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, கடும் நடவடிக்கைக்கு உரியதும் ஆகும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.அருமனையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற, ஜனநாயக கிறிஸ்துவ பேரவை அமைப்பின் ஆலோசகரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது, நம் தாய் நாட்டின் மீது அவர் அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தை சேர்ந்தோர் கொண்டிருக்கும் உச்சபட்ச வெறுப்பை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.'பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம், நம் மீது தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக தான் கிறிஸ்துவர்களாகிய நாங்கள், கால்களில் 'ஷூ' அணிகிறோம். அதற்காக தான், அரசு இலவசமாக செருப்பு வழங்குகிறது' என்றார்.

அவர் அத்துடன் நிறுத்த வில்லை. 'நாம் வணங்கும் தெய்வம் உயிரோடு இருக்கிறது என்றால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நாய்களும் புழுக்களும் கடித்து சாவார்கள்' என்றார். இது, வெறுப்பின் உச்சம் என்றால் மிகையாகாது.தனி மனிதரின் செயல்பாடுகளை, கட்சி தலைவரின் செயல்களை விமர்சிக்க உரிமையுண்டு. ஏன், நாட்டின் பிரதமராகவே இருந்தால் கூட, அவரின் செயல்பாடுகளை விமர்சிக்க, நாட்டின் குடிமகன் என்ற வகையில், தார்மிக ரீதியில் அனைவருக்கும் உரிமை உண்டு.

அதே சமயம், வார்த்தைகளில் கவனம் தேவை. எதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருந்தால் தவறில்லை. ஆனால், தாய் நாட்டையும், அந்த தாய் நாட்டை சேர்ந்த, 130 கோடி மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக விளங்க கூடியவருமான நாட்டின் பிரதமரை, இவ்வளவு கொச்சை வார்த்தைகளால் விமர்சித்தது, நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்.இப்படி அவர் எல்லை மீறி பேசிக்கொண்டே சென்றார்.

அதை, அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூட கண்டிக்கவில்லை. மாறாக கரவொலி எழுப்பி, ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர் மேலும் உற்சாகமாக பேசினார்.இந்தியா என்பது, ஹிந்துக்களுக்கு மட்டுமான தேசமா;இது கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கு தாய் நாடு இல்லையா; இந்நாட்டை பற்றி அநாகரிகமாக பேசியபோது ஏன் யாருக்கும் கோபம் எழவில்லை?இந்நாட்டில் எத்தனையோ மதங்கள் பின்பற்றப்பட்டாலும், தேசம் என வரும் போது, இந்தியா என்பது அனைவருக்குமான தாய் நாடு தானே... அதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.
இந்தியா - பாக்., பிரிவினையின் போது, பாக்., முஸ்லிம் நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் இந்தியா, ஹிந்து நாடாகவில்லை. மாறாக, அனைவரையும் அரவணைக்கும் தாயுள்ளம் கொண்ட தேசமாகவே விளங்கியது. அன்று மட்டு மின்றி இன்றும், என்றும் அதே நிலைப்பாடு தான்.


எச்சரிக்கை

அதனால் தான் நம் நாட்டை, 'பாரத மாதா' என அழைக்கிறோம். அப்படிப்பட்ட பாரத மாதா மீது கால் பட்டால், அதன் அழுக்கு பட்டு சொறி, சிரங்கு வந்துவிடும் என பேசியுள்ளார், அந்த பாதிரியார் பொன்னையா.எத்தனையோ பாதிரியார்கள், இயேசு கிறிஸ்து மீது பற்று கொண்டு, உண்மையான கிறிஸ்துவர்களாக இறை தொண்டு மட்டுமே ஆற்றிக் கொண்டிருக்க, இவர் மதத்தை பரப்புவதை விட மத துவேஷத்தில் ஈடுபட்டார்.
'கன்னியாகுமரி மாவட்டத்தில், நாங்கள் மெஜாரிட்டி. முன், 42 சதவீதத்தில் இருந்தோம்; இப்போது, 62 சதவீதத்தை தாண்டி விட்டோம். விரைவில் 70 சதவீதத்தை தொட்டு விடுவோம். நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருப்போம்.'உங்களால் அதை தடுக்க முடியாது. அதை மிகவும் எச்சரிக்கையாக ஹிந்து சகோதரர்களுக்கு நாங்கள் சொல்லி கொள்கிறோம்' என, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியிருக்கிறார்.

இதில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், 'கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் பெரும்பான்மை பெற்று விட்டால், இந்நாட்டில் ஒரு ஹிந்து கூட உயிர் வாழ முடியாது' என மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். இது, மதக் கலவரத்தை துாண்டும் வகையில் உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. இப்படி பேசிய அவரை கண்டிக்கவோ, அவர் மீது புகார் கொடுக்கவோ, கழக தலைவர்களுக்கும், பாரம்பரியமிக்க காங்., தலைவர்களுக்கும் ஏன் மனம் வரவில்லை என்பது அவிழ்க்கப்படாத முடிச்சாக உள்ளது.

சிறுபான்மையினர் என்ற பெயரில், மாற்று மதத்தினர் என்ன பேசினாலும், ஹிந்துக்கள் அதை சகித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையினராக மாறினால், ஹிந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறாரே... தமிழகத்தில் 87 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனர்; அவர்களை பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை.

ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை அதிகமுள்ளோர்; தேசபக்தி உடையோர்; பிற மதத்தினரையும், தங்கள் சகோதரர் போல எண்ணுவோர்.கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்பினர் ஏன் ஜார்ஜ் பொன்னையாவை கண்டிக்கவில்லை என்ற கேள்வி தான், ஹிந்துக்களின் மனதை உறுத்துகிறது.'சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது, கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அவர்களுக்கு போட்ட பிச்சை' என, பகிரங்கமாக பேசினார் ஜார்ஜ் பொன்னையா.
தி.மு.க., அல்லது அவர்களின் தோளில் சவாரி செய்யும் காங்., ஆகிய இரு கட்சியினரும், இதற்கு இன்று வரை பதில் கூறவில்லை.குறிப்பிட்ட ஒரு சில சட்டசபை தொகுதிகளில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருக்கும் சிறுபான்மையினர், 'மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி அமைக்க தாங்கள் தான் காரணம்' என, மார்தட்டிக் கொள்ளும் வகையில், சிறுபான்மை மதத்தின் போதகரான பாதிரியார் பொது வெளியில் மார்தட்டி பேசுகிறார். அதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் சிறு மறுப்பு கூட இல்லை என்றால், அவர் கூறுவதில் உண்மை இருக்கிறது என்று அர்த்தமா அல்லது இந்த அரசு சிறுபான்மையினரை கண்டு அஞ்சுகிறது என அர்த்தம் கொள்வதா?


மவுனம் காக்கிறார்

ஒரு ஊடகம், கூட்டணி கட்சி தலைவர்களிடம் வலிய சென்று, பாதிரியாரின் பேச்சு குறித்து கருத்து கேட்டது. அத்தனை பேரும், 'அது வந்து... பேசியிருக்க கூடாது... இருந்தாலும் மோடி அரசு தவறானது... பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்' எனக் கூவியுள்ளனர்.ஜனநாயகத்தின் நான்காம் துாணான இந்த ஊடகங்களுக்கு என்னவாயிற்று... பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா குறித்த செய்தியை, 'தினமலர்' நாளிதழ் பிரசுரம் செய்த பின், ஹிந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின், ஏதோ வேண்டா வெறுப்புக்கு, 'பாதிரியாரின் அநாகரிக பேச்சு' என்ற தலைப்பில், காட்சி ஊடகங்களில் சிறியதாக செய்தி வெளியானது.

இது போன்ற செய்தியை பெரிதாக்க கூடாது என, அந்த ஊடகங்கள், 'சப்பைக்கட்டு' கட்டலாம். ஆனால் இதே போன்ற பேச்சை, ஹிந்து அமைப்பை சேர்ந்தோர் அல்லது பா.ஜ., தலைவர்கள் யாரேனும் பேசியிருந்தால், ஊடகங்கள் அதையும் இப்படித் தான் கையாண்டிருக்குமா என்பது ஊரறிந்த விஷயம்.'நாட்டில் சிறுபான்மையினருக்கு ஆபத்து... பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார்; குண்டர் சட்டம் பாயுமா?' இப்படி எண்ணற்ற கேள்வி எழுப்பி, நாட்டை உலுக்கியிருப்பரே.'திராவிட போர்வையாளர்'களான வீரமணி, சுப.வீரபாண்டியன், வைகோ, திருமாவளவன் போன்றோர் எப்படி எல்லாம் குதித்திருப்பர்... இப்போது ஒருவரையும் காணோம்; எங்கே மறைந்துள்ளனர் அந்த போர்வையாளர்கள்?

அநாகரிகமாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்கலாமா, வேண்டாமா என, தி.மு.க., அரசு ரொம்ப யோசித்தது. அதனால், காவல் துறையினரும் என்ன செய்வது என தெரியாமல் திணறினர்.இதற்கிடையில், அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி, கடும் கண்டனத்தை பெற்றது. ஹிந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து, வேறு வழியின்றி ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை காவல் நிலைய போலீசார், ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.

வெளிநாடு தப்பித்து செல்ல இருந்த பாதிரியாரை, மதுரை கருப்பாயூரணி பகுதியில் போலீசார் கைது செய்தனர்.இவரது கைது பற்றிய செய்தியை, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள், 'நழுவுற மீன்' போல வெளியிட்டன.'அவதுாறாக பேசிய பாதிரியார் கைது; பிரதமரை தரக்குறைவாக திட்டிய பாதிரியார் கைது' இப்படி பல்வேறு தலைப்புகளில் செய்தி வெளியாயின.கிறிஸ்துவ, இஸ்லாமிய, திராவிட தலைவர்கள் பிரதமர் மோடியை சகட்டு மேனிக்கு விமர்சிப்பது வழக்கமான ஒன்று தான்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவரை பற்றி மட்டும் பேசவில்லை.அதை விட முக்கியமான ஒரு விஷயத்தை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய அனைத்தும் கண்டிக்கத்தக்கது என்றாலும், தி.மு.க., பற்றிய விமர்சனம் விவாதத்திற்கு உரியது.



கண்டுகொள்ளவில்லை



நாட்டில் எது நடந்தாலும், நான்கு நபர்களை அழைத்து விவாதம் நடத்தும், 'டிவி' நிறுவனங்கள், இதை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை?'தி.மு.க.,வின் வெற்றி என்பது கிறிஸ்துவர் மற்றும் முஸ்லிம்கள் போட்ட பிச்சை' என்ற வாசகத்திற்கு பின்னால் உள்ள அரசியலை பொது மேடையில் விவாதிக்க வேண்டியது, ஜனநாயகத்தின் நான்காம் துாணான ஊடகத்தின் கடமை அல்லவா!

தி.மு.க., வெற்றியின் உண்மையான காரணம் வெளிப்பட்டு விடுமோ என்பதால் தான், அக்கட்சி தலைவர்கள் பாதிரியாரின் பேச்சுக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அமைதி காக்கின்றனர். தி.மு.க., ஆதரவு ஊடகங்களும் கள்ள மவுனம் சாதிக்கின்றன.அரசியல்வாதிகளுக்கும், பணத்திற்கும், ஜனநாயகத்தின் நான்காவது துாணான ஊடகங்கள் குடை சாய்ந்து விட்டதோ என்ற எண்ணம், மக்களிடம் தோன்றிஉள்ளது. அதை சரி செய்ய வேண்டியது, ஊடகங்களின் கடமை!
சி.கலாதம்பி
பத்திரிகையாளர்

தொடர்புக்கு:

இ - மெயில்:

sureshmavin@gmail.com

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-ஆக-202119:32:39 IST Report Abuse
மலரின் மகள் இரண்டு மதங்களும் ஒன்றுக்கொன்று மாறானவை. முகத்தை எதிர்த்து பிணைத்து உருவானது. உலகம் முழுவதும் இருவருக்கும் உள்ள ஒற்றுமை, மதமாற்றம் என்பதுதான். இப்படி இருக்க இவர்கள் இருவரும் தமிழகத்தில் இணைந்து ஹிந்துக்களை எதிர்க்க இணைகிறார்களா? சிறுபான்மை என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு என்ன செய்கிறார்கள்? பணம் வெளிநாடுகளிலிருந்து வருவதை முழுதும் கண்காணித்தார்கள், அதை கணக்கு கேட்டார்கள், கட்டுப்பாடுகளை நாட்டின் சட்ட திட்டடங்களுக்கு உற்பாட்டு செய்தார்கள். உழைப்பின்றி வந்த பணம் நின்றுபோனதில் பலருக்கு உச்ச பட்சம் வெறுப்பு. அதற்கு காரணமானரராக நமது பிரதமரின் மீது அதீத காழ்ப்புணர்வில் இருக்கிறார்கள். இயலாமை ஏமாற்றம் பொய்த்தன்மை வெளிப்பட்டுவிட்டதே என்ற நிலை, எரிச்சலாக வெளியேறுகிறது என்று என்ன இடம் தரும் வகையில் பேசிருப்பதாக புரிந்து கொள்ளவேண்டுமாய் அறிய முடிகிறதல்லவா?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
13-ஆக-202104:36:09 IST Report Abuse
meenakshisundaram இவனுங்களை எல்லாம் ஜாமீனில் வெளி விடும் போது ஹிந்து கோவில் முன்பு தினசரி ஆயிரம் தோப்புக்கரணம் போட சொல்லி கண்டிஷன் போடலாம் -போலீஸ் ஸ்டேஷன் கையெழுத்து வேஸ்ட் -அங்கே போனாலும் காவலரை மத மாற்றம் செய்ய முயல்வான் ,இவர்களை போன்றவர்கள் தங்களின் மதத்தை மதிப்பதோ இல்லை பின் பற்றுவதோ கிடையாது ,பணத்தை வாங்கிக்கொண்டு மற்றும் ஏழை கிறிஸ்த்தவனின் தகிக்ஷிணையை ஆண்டவன் (?) பெயரால் கலெக்ட் செயது பிற உயர்ந்த மதங்களின் கோட்பாடுகளையும் கொளகைகையும் பரிகசித்து தங்களின் வயிற்றை கழுவிக்கொள்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள் ,இந்த மாதிரி ஆட்கள் மிக மோசமான அரசியல் வாதிகளைவிட ஆபத்தானவர்கள்
Rate this:
Cancel
03-ஆக-202123:17:32 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கிறிஸ்தவர்களின் ஜெபத்தின் வலிமையால்தான் தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தேவாலய ஜெபக் கூட்டம் ஒன்றில் பேசி இருக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X