பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக போலீசாருக்கான 'ஆர்டர்லி' முறை ரத்தாகுமா? நடவடிக்கை கோரி பெண் போலீஸ் குமுறல்

Updated : ஆக 02, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: தமிழக போலீசில், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நீடிக்கும், 'ஆர்டர்லி' முறை ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை செய்யும் ஆர்டர்லி போலீசாரை திரும்ப பெறுவது எப்போது?' என கேள்வி எழுப்பி, பெண் போலீசார், 'ஆடியோ' வெளியிட்டு தங்கள் குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,
தமிழக போலீஸ், ஆர்டர்லி, முறை,ரத்தாகுமா?

சென்னை: தமிழக போலீசில், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நீடிக்கும், 'ஆர்டர்லி' முறை ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை செய்யும் ஆர்டர்லி போலீசாரை திரும்ப பெறுவது எப்போது?' என கேள்வி எழுப்பி, பெண் போலீசார், 'ஆடியோ' வெளியிட்டு தங்கள் குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.

தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., முதல், காவலர் வரை 1.20 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5,000த்துக்கும் மேற்பட்ட போலீசார், அயல் பணி என்ற அடிப்படையில், உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக எடுபிடி வேலை செய்து வருகின்றனர். அதிகாரிகள் மற்றும் அவரது மனைவி, மகன், மருமகளின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, இவர்களின் மனம் நோகாத வாறு, இட்ட பணிகளை செய்து நற்பெயர் பெற வேண்டிய நிலையில் இவர்கள் உள்ளனர்.


அடிமை வாழ்வு

காய்கறி வாங்கி வருதல், தோட்டம் மற்றும் நாய்கள் பராமரிப்பு, அதிகாரிகளின் மனைவியரை அழகு நிலையத்திற்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகின்றனர்.சில போலீசார், பணிச்சுமைக்கு பயந்து உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக ஒட்டிக் கொள்கின்றனர்.இதற்கு கைமாறாக, அவர்களுக்கு பதவி உயர்வு, விருது, சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படாமல், உயர் போலீஸ் அதிகாரிகள் கவனித்துக் கொள்கின்றனர்.

ஆர்டர்லி போலீஸ் முறையால், ஒரு தலைமுறை போலீசாருக்கு, காவல் நிலைய நடைமுறைகள் தெரியாமலேயே ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.'இந்த அடிமை வாழ்வில் இருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும். ஆர்டர்லி போலீஸ் முறைக்கு, முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக, பெண் போலீசார், 'வாட்ஸ் ஆப்' குழுக்களில், 'ஆடியோ' வெளியிட்டு தங்களின் குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.


'ஓசி' பயணம் கூடாது

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:'பஸ்களில் 'ஓசி' பயணம் கூடாது' என போலீசாருக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.சொந்த காரணங்களுக்காக செல்லும் போது, பஸ்களில் டிக்கெட் வாங்கும்படி கூறியுள்ளார்; இது வரவேற்கத்தக்கது.

ஆனால், ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக இருக்கும் போலீசாரை எப்போது திரும்ப பெற்று, பணி ஒதுக்கீடு செய்யப் போகிறீர்கள் என்பதையும் அறிய ஆவலாக உள்ளோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

காவல் துறையில் காலி பணியிடங்கள் அதிகரித்து, பணிச்சுமை ஏற்பட்டு வரும் நிலையில் ஆர்டர்லி போலீஸ் முறையை ஒழித்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


அறிக்கை தாக்கல்

இது குறித்து போலீசார் கூறியதாவது:தமிழகத்தில், 1979ம் ஆண்டே ஆர்டர்லி போலீஸ் முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக ஆவணத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ஆர்டர்லி முறை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டபோது, அப்போது டி.ஜி.பி.,யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், இதை தான் பதில் மனுவாக தாக்கல் செய்தார். நடைமுறையில் அப்படி அல்ல.

டி.ஜி.பி.,யில் இருந்து, உதவி எஸ்.பி., வரையிலான அதிகாரிகளின் வீடுகளில், அயல் பணியாக ஓட்டுனர், அலுவலக உதவியாளர், முகாம் அலுவலகம் என்ற பெயர்களில், அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக, ஆண், பெண் போலீசாரும் வேலை பார்த்து வருகின்றனர். இது, அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். அறிவிக்கப்படாத வேலைக்காரர்கள் இவர்கள். அதிகாரிகளின் வீடுகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணி கூட இவர்களுக்குத் தரப்படுகிறது.

வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளின் உறவினர்களை, இவர்கள் தான் அழைத்து வருவர். அதிகாரிகளின் வாரிசுகளை பள்ளி, கல்லுாரிக்கு அழைத்துச் செல்லுதல், சமையல் உள்ளிட்ட வேலைகளை, பெண் போலீசார் செய்து வருகின்றனர்.இவர்கள், அதிகாரிகளின் வீடுகளுக்கு செல்ல, அரசு வாங்கி கொடுத்த இரு சக்கர வாகனம் தரப்படுகிறது. குறித்த சமயத்தில் உணவுப்படி, போனஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைத்து விடும். மற்ற அதிகாரிகளின் தொந்தரவு இருக்காது.

அதிகாரிகளின் வீடே கதி என இருப்பர். இவர்களால் அதிகாரிகளின் வீடுகளில் சில குழப்பங்களும் ஏற்படுவது உண்டு. இதனால், ஆர்டர்லி போலீசார் துரத்தப்பட்டு, அதிகாரிகளின் பழி வாங்கும் நடவடிக்கையில் சிக்கித் தவிப்போரும் உள்ளனர்.காவல் துறையில் மாதம்தோறும் 1,000 போலீசாராவது ஓய்வு பெறுகின்றனர். நோய் பாதிப்பு காரணமாக நீண்ட விடுப்பில் இருக்கும் போலீசாரும் அதிகம். விபத்தில் சிக்கி மீண்ட போலீசார், இலகுவான பணிகளில் மட்டுமே ஈடுபடுவர். இதனால், போலீசார் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். இதனால், பணிச் சுமையில் சிக்கி தவிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


விரும்பியும் செய்கிறோம்!

'ஆர்டர்லி' போலீசார் கூறியதாவது:நாங்கள் சீருடை பணியாளர்கள். அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கை பாயும். இதனால், ஆர்டர்லிகளாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். நோயில் சிக்கித் தவிக்கும் குடும்ப உறுப்பினர்களை காக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இதற்கு, ஆர்டர்லி போலீஸ் முறை உதவியாக உள்ளது. இதனால், விரும்பியே இப்பணிகளை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


இப்படியும் இருக்காங்க!

தற்போது, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.,யாக உள்ள ஈஸ்வரமூர்த்தி வீட்டில்,ஆர்டர்லி போலீஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவர் பணியில் சேர்ந்த நாளில் இருந்து, ஒருஆர்டர்லி போலீசை கூட வீட்டு வேலைக்குஅமர்த்தியது இல்லை. அதுபோல, சொந்த பணிகள் மற்றும் உறவினர்களின் பயன்பாட்டிற்கு, அரசு வாகனத்தை பயன்படுத்த மாட்டார். இவரைப் போல, விரல் விட்டு எண்ணக்கூடிய போலீஸ் அதிகாரிகளும் இருக்கத் தான் செய்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X