பொது செய்தி

இந்தியா

எதிர்மறை எண்ணத்தை மாற்றுங்கள்: போலீசாருக்கு பிரதமர் அறிவுரை

Updated : ஆக 02, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:“மக்கள் மத்தியில் காவல் துறையினர் மீது உள்ள எதிர்மறையான எண்ணத்தை மாற்றிக்காட்ட வேண்டும்,” என, இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.நடவடிக்கைதெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் 'வீடியோ கான்பரன்ஸ்'
 எதிர்மறை,எண்ணம், மாற்றுங்கள்,போலீசார்,பிரதமர் ,அறிவுரை

புதுடில்லி:“மக்கள் மத்தியில் காவல் துறையினர் மீது உள்ள எதிர்மறையான எண்ணத்தை மாற்றிக்காட்ட வேண்டும்,” என, இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.


நடவடிக்கை

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

புதிதாக பயிற்சிகளை நிறைவு செய்துள்ள இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனைவரும் தேசிய நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.நாட்டின் மீது நாம் வைத்துள்ள பற்று, நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பிரதிபலிக்க வேண்டும்.மக்களிடையே, காவல் துறையினர் மீது எதிர்மறையான எண்ணம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு போலீஸ் மீது இருந்த அந்த எண்ணம் சற்று மாறியது. எனினும் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது.நம் நாட்டில் சட்டம் - ஒழுங்கு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, போலீஸ் அதிகாரிகள் பலர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். பல நாட்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் இரவு, பகல் பாராமல், போலீசார் பணியாற்றி வருகின்றனர்.


வித்தியாசம்

இப்படி பல தியாகங்களை செய்தும் போலீஸ் அதிகாரிகள் மீதான மக்களின் எண்ணம் சற்று வித்தியாசமாகவே உள்ளது.புதிதாக பொறுப்பு ஏற்க இருக்கும் இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மக்களின் அந்த எண்ணத்தை மாற்றிக்காட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X