90 லட்சம் பார்வையாளரை கவர்ந்த அமிர்தசரஸ் பாட்டி

Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:பஞ்சாபில் தள்ளாத வயதில் வயிற்றுப் பிழைப்பிற்காக பழரசக் கடை நடத்தும் பாட்டியின் 'வீடியோ' பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி, 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில, காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமிர்தசரஸ் நகரில், ரானி டா பாக் அருகே, 80 வயது முதிய பெண்மணி பழரசக் கடை நடத்தி வருகிறார். உடல்
 90 லட்சம், பார்வையாளரை, கவர்ந்த, அமிர்தசரஸ், பாட்டி

புதுடில்லி:பஞ்சாபில் தள்ளாத வயதில் வயிற்றுப் பிழைப்பிற்காக பழரசக் கடை நடத்தும் பாட்டியின் 'வீடியோ' பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி, 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில, காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமிர்தசரஸ் நகரில், ரானி டா பாக் அருகே, 80 வயது முதிய பெண்மணி பழரசக் கடை நடத்தி வருகிறார். உடல் தளர்ந்தாலும் மனம் தளராமல், இன்முகத்துடன் வாடிக்கையாளர்களுக்கு தன் கையாலேயே, சுவையான சாத்துக்குடி சாறு தயாரித்து வழங்கி வருகிறார். துணை யாருமின்றி, ஒற்றை ஆளாக கடையை நடத்தும் அந்த பெண்மணிக்கு 'அமிர்தசரஸ் ஆன்டி' என்ற செல்லப் பெயரும் உண்டு.

தள்ளாத வயதில் அயராது உழைக்கும் பாட்டியை கவுரவ் வாசன் என்ற பிரபல சமூக ஊடக சமையல் கலைஞர் படம் பிடித்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்த பதிவு, 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. பலர் பாட்டியின் வங்கி கணக்கு எண்ணை தெரிவித்தால், பணம் அனுப்புகிறோம் என, பதிவு செய்துள்ளனர். இதுபற்றியெல்லாம் தெரியாத பாட்டி, திடீரென ஏராளமானோர் தன்னை நலம் விசாரிப்பதை பார்த்து நெகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X