அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் முதல்வர் ஸ்டாலின் துவக்கம்

Updated : ஆக 02, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை:கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் உயராமல் இருக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.விழிப்புணர்வு தொடர் பிரசார துவக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில்
கொரோனா,விழிப்புணர்வு,பிரசாரம்,முதல்வர்,ஸ்டாலின், துவக்கம்

சென்னை:கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் உயராமல் இருக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.விழிப்புணர்வு தொடர் பிரசார துவக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.முதல்வர் ஸ்டாலின், விழிப்புணர்வு பிரசாரத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு கண்காட்சியையும் துவக்கி வைத்தார்.

கொரோனா மூன்றாம் அலையை தடுக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட, '#MASKUpTN' என்ற, 'ஹேஸ்டாக்'ஐ பிரபலப்படுத்த, 'ஷேர்சாட் மொபைல் ஆப்' மற்றும் கொரோனா, 'பேட்ஜ்' வெளியிடப்பட்டது. அத்துடன், கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு, எல்.இ.டி., திரை பொருத்தப் பட்ட பிரசார வாகனங்களையும், கையெழுத்து இயக்கத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.

ஒரு வாரத்திற்கு, தினமும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடையே குறும்படப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகம் உருவாக்குதல், எப்.எம்., ரேடியோவில் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், 'மீம்ஸ்' உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும்,கிராமியக் கலைஞர்கள்வழியாக விழிப்புணர்வுஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க, கபசுர குடிநீர் வழங்க வேண்டும். கிராம அளவில், வார்டு அளவில், மண்டல அளவில், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கவுரவித்து, பரிசுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.


ஒரு வாரம் கண்காட்சி!

சென்னை, கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு கண்காட்சியை, வரும் 6ம் தேதி வரை பொதுமக்கள்பார்வையிடலாம்; கட்டணம் கிடையாது. காலை 10:00 முதல், மாலை 6:00 மணி வரை, முக கவசம்அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பார்வையிடலாம் என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X