பெகாசஸ் ஒட்டு கேட்புக்கு இங்கே ஏன் இவ்வளவு எதிர்ப்பு?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

பெகாசஸ் ஒட்டு கேட்புக்கு இங்கே ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

Updated : ஆக 02, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (22)
Share
தீவிரவாதிகளின் தாரக மந்திரம், பொய் செய்தி பரப்புவது. பொய், மின்னல் வேகத்தில் உலகத்தை சுற்றி வந்துவிடும். ஆனால், உண்மை உலகத்திற்கு அவ்வளவு எளிதில் தெரிவதில்லை, மறைந்துவிடும். இப்படித்தான் சமூக, ஊடக வலை தள தலிபான்கள், பொய்யை கண்மூடித்தனமாக பரப்பி வருகின்றனர். தலிபான்களை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் பற்றிய வரலாற்றை முழுமையாக புரிந்துகொள்ள
 பெகாசஸ், ஒட்டு கேட்பு, இங்கே ஏன் ,இவ்வளவு,எதிர்ப்பு?

தீவிரவாதிகளின் தாரக மந்திரம், பொய் செய்தி பரப்புவது. பொய், மின்னல் வேகத்தில் உலகத்தை சுற்றி வந்துவிடும். ஆனால், உண்மை உலகத்திற்கு அவ்வளவு எளிதில் தெரிவதில்லை, மறைந்துவிடும். இப்படித்தான் சமூக, ஊடக வலை தள தலிபான்கள், பொய்யை கண்மூடித்தனமாக பரப்பி வருகின்றனர். தலிபான்களை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் பற்றிய வரலாற்றை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.


கலவர பூமி தான் ஆப்கானிஸ்தான்இது, மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கும் ஒரு இஸ்லாமிய நாடு. இதற்கு ஒரு நெடிய
வரலாறு உண்டு. இந்த பூமியை கிரேக்கர்களும், ரோமானியர்களும், பாரசீகர்களும், இந்தியாவிலிருந்து மவுரியர்களும்,மங்கோலியாவின் செங்கிஸ்கானும் படையெடுத்து ஆட்சி புரிந்தனர். ஆனால் எந்த சாம்ராஜ்யமும் நீண்ட கால ஆட்சியில் நீடிக்கவில்லை. காரணம், அங்கு அடிக்கடி நடந்த பழங்குடி மக்கள் இனப் போர் தான்.இதனால் இது, ஒரு கலவர பூமியாகவே இருக்கிறது. இந்த பூமியை சரித்திர நோக்கர்கள், 'கிரேவ்யார்டு ஆப் எம்பரர்ஸ் - சக்ரவர்த்திகளின் சுடுகாடு' என்றனர்.

பிரிட்டிஷ்காரர்கள் சுதந்திரம் கொடுத்த பின், ஆப்கன் மன்னரைக் கொன்று, இஸ்லாமிய
புரட்சியாளர்கள் நாட்டை கைப்பற்றினர். இவர்கள் தான் இஸ்லாமிய தலிபான்கள்.இரண்டாம் உலக போருக்குப் பின், சோவியத் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற ஆப்கன் ஆட்சியை எதிர்த்து போர் புரிய, இஸ்லாமிய தலிபான்களுக்கு ஆதரவாக, பாகிஸ்தானில் ராணுவ முகாம்
அமைத்தது அமெரிக்கா.ஆப்கனில் இருந்த சோவியத் படையுடன், பாகிஸ்தானும், அமெரிக்காவும் போர் புரிந்தன; சோவியத் வெளியேறியது.

அதன் பின், அமெரிக்காவும், நேச நாடுகளும் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தி, ஒரு லட்சம் அமெரிக்க ராணுவ படைகளுடன், ஜனநாயகம் காக்க முகாம் அமைத்து தங்கினர். ஜனநாயகம் விரும்பாத இஸ்லாமிய தலிபான்களும், முஜாஹிதீன்களும், கடந்த 20 ஆண்டுகளாக ஆங்காங்கே தாக்குதலும், போர்களும் நடத்தினர். \

இந்த புரட்சிக்கு பின்புலமாக, ஐ.எஸ்.ஐ.,யான பாகிஸ்தான் ராணுவம் இருந்தது. ஆப்கானிஸ்தானில், 21 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து, மூவாயிரம் அமெரிக்கர்களை பலிகொடுத்த பின், புதிய ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்கப் படை களை திரும்பப் பெற்றார்.இன்று இது, தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானை கைப்பற்ற சுலபமாக வழி வகுத்துவிட்டது.


தலிபான்களுக்கு நிதி உதவி எங்கிருந்து வருகிறது?தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தங்க முக்கோணத்தில் விடை தெரிந்து கொள்ளலாம். தாய்லாந்து, லாவோஸ், மியான்மர் ஆகியவற்றின் எல்லைகள் அடங்கிய பகுதியில், போதை மருந்து புழக்கம் தாராளம். இதற்கு 'சப்ளை', ஆப்கானிஸ்தான் தான்! ஆப்கானிஸ்தான், போதை மருந்துகளின் உறைவிடம். இந்த நெடிய வரலாற்றை கூர்ந்து நோக்கும்போது, உலகிலேயே நிலையான ஆட்சியை ஏற்படுத்த முடியாத கலவர பூமியாகவே ஆப்கன் இருக்க வேண்டி வரும் என்பது தெரிகிறது.


'பெகாசஸ்', தலிபான்களைக் காட்டிக் கொடுக்கிறது

இங்கு இப்படி துல்லியமாக தாக்குதல் நடத்தி, இவ்வளவு நாள் அமெரிக்காஎப்படி ஆண்டு
வந்தது?பெகாசஸ்!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., என்ற நிறுவனம் தான், சர்ச்சைக்குரியவர்களைக் கண்காணிக்க ஒரு வேவு மென்பொருளை தயாரித்துள்ளதாக தெரிவித்து, அமெரிக்காவில் பங்கு சந்தைப்
பட்டியலில் இடம் கேட்டது. இதில் அமெரிக்க கம்பெனிகள் முதலீடு செய்தன. இது இன்று பல பில்லியன் டாலர்கள் முதலீடு கொண்ட கம்பெனி.சர்வதேச நாடுகளில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள், இந்தச் செயலியை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். நல்லதற்காகவும், கெடுதலுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களைக் கண்காணிக்க பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. கிட்டத்தட்ட 50 உலக நாடுகளில், மிக உயர் மட்டத்தில் உள்ள 60 அதிகாரிகளை பெகாசஸ் கண்காணிக்கிறது. சர்வதேச அளவில், 50 ஆயிரம் முக்கியஸ்தர்களின் மொபைல் போன்எண்களை தன் வளையத்தில் வைத்துள்ளது.

இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் இதில்அடக்கம்.'தீவிரவாதிகளை கண்காணிக்க, அவர்கள் இடத்தை, தொடர்புகளை கண்காணிக்க; குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களை கண்காணிக்க.குழந்தைகளை கடத்தி, கற்பழிப்பு செய்து, விபச்சாரத்தில்
தள்ளுவோரைக் கண்காணிக்க; பெண்களை பாலியல் தொழிலுக்கு கடத்தும் சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்க; மருந்து கடத்தல் கும்பல்களை கண்டுபிடிக்க...' என இந்த நிறுவனம் தன் பணிகளை அடுக்குகிறது.

'அரசியல் ரீதியாகவோ, அரசுகளுக்கு எதிராகவோ, தனிமனித சுதந்திரத்திற்கு எதிராகவோ,
எங்கள் மென்பொருளை பயன்படுத்த விரும்பவில்லை' என்றும் இந்நிறுவனம் கூறுகிறது.'சவுதி ஆயுத வியாபாரி அட்னான் கசோக்கி உறவினரான ஜமால் கசோக்கி, 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். இவர் துருக்கியில் சுட்டு கொலை செய்யப்படுவதற்கு, இந்த பெகாசஸ் மென்பொருள் தான் உபயோகப்படுத்தப்பட்டது. இதற்கு சவுதி அரேபியா தான் காரணம்' என, அரசியல் நோக்கர்கள் சந்தேகப்படுகின்றனர் .

அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு ஏஜென்சி என்ற வேவு பார்க்கும் அமைப்பு, 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்துக்கு நிதி உதவி செய்துள்ளது.எனவே, வாட்ஸ் ஆப் நிறுவனத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வாட்ஸ் ஆப் தகவல் அனைத்தும், இந்த ஏஜென்சி கையில்
இப்போது.வாட்ஸ் ஆப் மூலமாகவே பெகாசசை நுழைத்து, அனைத்து தகவல்களையும் எடுத்து விடலாம். இணையம் வழியே, கம்ப்யூட்டரில், லேப்டாப்பில் சேமிக்கப்படும் அனைத்து
தகவல்களையும், 'சுட்டு' விடலாம்.

இப்போது மூன்றாம் தலைமுறை பெகாசஸ் வந்திருக்கிறதாம். இது நம் குரலை மூல
தனமாக வைத்தே, அனைத்து தகவல்களையும் எடுத்து விடுமாம். கூடு விட்டு கூடுபாயும் வித்தை.கடந்த 25 ஆண்டுகளில், தமிழகத்தில் ஊடக வளர்ச்சி அபரிமிதமானது. பொய் பொய்யாய் எல்லா தகவல்களையும், போன் மூலமாக, சமூக வலைதளம் வாயிலாகப் பரப்பி, தம்சம்பாத்தியத்தை சிலர் நிலைநிறுத்திக் கொண்டனர்.

தற்போது சமூக வலை தளங்களில் வரும் செய்திகளில் பெரும்பாலானவை போலியான, பொய்யான செய்திகளே. இதற்கு அரசியல்வாதிகள் தான் பின்புலம். கையில் பொய் செய்தி; வாயில் தோசை.எந்த விஷயம் குறித்தும் அடிப்படை அறிவே இல்லாமல், உளறிக் கொட்டுவது;
கேட்டால், கருத்து சுதந்திரம். மத எதிர்ப்பு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு வேட்பு வைப்பது, மொழி எதிர்ப்பு என கூட்டத்தைக் கூட்டி, கலவரத்தை உண்டு பண்ணுவது என, கதை நீள்கிறது. 'நான் இருக்கேன்' எனக் காட்டிக் கொண்டால் தானே சம்பாதிக்க முடியும்!

இங்கே தான் பிரச்னை துவங்குகிறது... பாழாய் போன பெகாசஸ், காட்டிக் கொடுத்து விடுகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகள், பள்ளி சிறுவர் - சிறுமியர், கல்லுாரி மாணவர்களை அழைத்து, தலா 500 ரூபாய் கொடுத்து, கல்லெறிய துாண்டுகின்றனர். இளைஞர்களை துாண்டி 200, 500 ரூபாய் என, பணம் கொடுத்து, அவர்கள் மூலம் குறுஞ்செய்தி, வரைபடம், 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர்' மூலம் மதம் தொடர்பான வக்கிரங்களையும், அரசியல் தலைவர்கள் பற்றியும் அவதுாறாக செய்தி பரப்புகின்றனர்.

இந்த 'டிரெண்ட்' நாடு முழுதும் நடக்கிறது இப்போது!பிரச்னை என்னவெனில், நாட்டுக்கு எதிராக எந்த தகிடுதத்தம் செய்தாலும், பெகாசஸ் காட்டிக் கொடுத்து விடுகிறது. இது தான் இங்கே, தலையாய பிரச்னையாய் பார்லிமென்டை முடக்குகிறது; புரிந்து கொள்ளுங்கள்!

- பெரியார் பித்தன்

periyarpiththan2020@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X