சாராய வியாபாரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராய வியாபாரி கைது

Added : ஜூலை 31, 2021
Share
நெல்லிக்குப்பம் : நடுவீரப்பட்டு அருகே தொடர்ந்து சாராயம் விற்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டை அடுத்த கீரப்பாளையத்தை சேர்ந்தவர் காட்டுராஜா என்ற காசிலிங்கம், 51; இவர் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்றதால் கைதாகி சிறையில் உள்ளார்.இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்த குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

நெல்லிக்குப்பம் : நடுவீரப்பட்டு அருகே தொடர்ந்து சாராயம் விற்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டை அடுத்த கீரப்பாளையத்தை சேர்ந்தவர் காட்டுராஜா என்ற காசிலிங்கம், 51; இவர் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்றதால் கைதாகி சிறையில் உள்ளார்.இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்த குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மா எஸ்.பி.யிடம் புகார் கூறினார். எஸ்.பி.சக்தி கணேஷ் பரிந்துரையின் பேரில் காசிலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் காசிலிங்கத்திடம் மதுவிலக்கு போலீசார் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X