ஆழ்துளை கிணறுகளால் பாதிப்பு | Dinamalar

ஆழ்துளை கிணறுகளால் பாதிப்பு

Added : ஜூலை 31, 2021 | |
விருத்தாசலம் : விருத்தாசலம் கல்லுாரி நகரில் நகராட்சி ஆழ்துளை கிணறுகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ளதாக மனு கொடுக்கப்பட்டது. விருத்தாசலம் கல்லுாரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த மனு:கல்லுாரி நகரில் சிறுவர் பூங்கா அமைத்து தர பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நகராட்சி மண்டல நிர்வாகத்தால்

விருத்தாசலம் : விருத்தாசலம் கல்லுாரி நகரில் நகராட்சி ஆழ்துளை கிணறுகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ளதாக மனு கொடுக்கப்பட்டது.

விருத்தாசலம் கல்லுாரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த மனு:கல்லுாரி நகரில் சிறுவர் பூங்கா அமைத்து தர பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நகராட்சி மண்டல நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 சென்ட் சிறுவர் பூங்காவை, சங்க முயற்சியால் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, நகராட்சி வசம் ஒப்படைத்தோம். ஆனால் சிறுவர் பூங்கா அமைக்காமல், அங்கு பம்ப் ஹவுஸ் கட்டி 550 அடி ஆழ்துளை போர்போட்டு 24 மணி நேரம் நீரேற்றம் செய்யப்படுகிறது. இதற்காக பூங்காவில் 3 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

பூங்காவில் 550 அடி ஆழ்துளை கிணறும், அதனருகே ஏற்கனவே வாட்டர் டேங்க் மூலம் இரண்டு ஆழ்துளை கிணறுகள் மூலமாக இடைவிடாது தண்ணீர் எடுப்பதால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதித்துள்ளது.இதனால் இங்குள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. பூங்கா பகுதியில் மேலும் ஒரு போர் போட இடம் பார்த்து சென்றுள்ளனர்.இது நகராட்சி விதிகள் மற்றும் தமிழக அரசின் நிலத்தடி நீர் பராமரிப்பு கொள்கைக்கு விரோதமாகும். கல்லுாரி நகரில் பூங்கா அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X