ஆத்தூர்:கெங்கவல்லி தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் நேற்று, சமூக இடைவெளியின்றி மக்கள் கூடியதால், தற்காலிகமாக மூடும்படி தாசில்தார் உத்தரவிட்டார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கெங்கவல்லி தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் சேவை மையம் உள்ளது. இங்கு, இரு கணினியில், ஒரு கணினி பழுதடைந்துள்ளதால், ஒரு கணினி மூலம் ஆதார் பதிவு, திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்று, ஆதார் மையத்தின் முன் 100க்கும் மேற்பட்ட மக்கள் சமூக இடைவெளியின்றி நின்றதுடன், பலர் முககவசம் அணியாமல் வந்துள்ளனர்.
தகவலறிந்த தாசில்தார் வெங்கடேசன், ஆதார் சேவை மையத்தை தற்காலிகமாக மூடும்படி உத்தரவிட்டார்.ஆதார் சேவை மையத்துக்கு வரும் மக்கள், சமூக இடைவெளி பின்பற்றுதல், முககவசம் கட்டாயமாக அணிந்து வர வேண்டும். இந்த விதிகள் பின்பற்றாத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுமக்களிடம், தாசில்தார் எச்சரிக்கை செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE