பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்புமா மேட்டூர் அணை? கவலையில் நீர்வளத் துறை!

Updated : ஆக 02, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை:மேட்டூர் அணை, ஒரு மாதத்தில் நிரம்புமா என்ற கவலையில் நீர்வளத் துறையினர் ஆழ்ந்துள்ளனர்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின்பாசன ஆதாரமாக மட்டுமின்றி, கரூர், நாமக்கல், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையையும், சேலம் மாவட்ட மேட்டூர் அணை பூர்த்தி செய்கிறது. இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி., ஆகும்.அணையில் 60 டி.எம்.சி., நீர்
 நிரம்புமா, மேட்டூர் அணை?,கவலையில்,நீர்வளத் துறை!

சென்னை:மேட்டூர் அணை, ஒரு மாதத்தில் நிரம்புமா என்ற கவலையில் நீர்வளத் துறையினர் ஆழ்ந்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின்பாசன ஆதாரமாக மட்டுமின்றி, கரூர், நாமக்கல், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையையும், சேலம் மாவட்ட மேட்டூர் அணை பூர்த்தி செய்கிறது. இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி., ஆகும்.அணையில் 60 டி.எம்.சி., நீர் இருந்தால் பாசனத்திற்கு திறக்க வேண்டும் என்பது விதி.


இலக்கு நிர்ணயம்



அதன்படி, ஜூன் 12ம் தேதி குறுவை பருவ நெல் சாகுபடி பாசனத்திற்கு அணையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதை பயன்படுத்தி, டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடியை மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையில் 43.9 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணைக்கு சில நாட்களாக வரும் அதிக நீர்வரத்தால், நீர் இருப்பு சற்று உயர்ந்துள்ளது.


மழை தீவிரம்

அதே நேரத்தில், கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை ஆகஸ்ட் மாதத்துடன் விடை பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அங்கு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. இந்த அணைகள் நிரம்பினால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இதனால், ஒரு மாதத்தில் மேட்டூர் அணை நிரம்புமா என்ற கவலையில் நீர்வளத் துறையினர் உள்ளனர். இதற்கிடையே கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை, 4ம் தேதிக்கு பின், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X