பொது செய்தி

இந்தியா

பார்லி., முடக்கத்தால் ரூ.133 கோடி வீண்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி-எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பார்லிமென்ட் முடங்கியுள்ளதால் இரண்டு வாரங்களில், 133 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் துவங்கியது. இரண்டு வாரங்களாக பல பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளன.அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள, சமூக ஆர்வலர்களின்

புதுடில்லி-எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பார்லிமென்ட் முடங்கியுள்ளதால் இரண்டு வாரங்களில், 133 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



latest tamil news



பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் துவங்கியது. இரண்டு வாரங்களாக பல பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளன.அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள, சமூக ஆர்வலர்களின் மொபைல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 'விவாதம் நடத்தப்படாது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுஉள்ளதாவது:லோக்சபாவில், 54 மணி நேரத்தில், 7 மணி நேரம் மட்டுமே அலுவல் நடந்துள்ளது. ராஜ்யசபாவில், 53 மணி நேரத்தில், 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், 107 மணி நேரத்தில், 18 மணி நேரம் மட்டுமே பார்லி., செயல்பட்டுள்ளது. இதனால், 133 கோடி ரூபாய், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X